சீனப் புத்தாண்டை முன்னிட்டு கரையோரப் பூங்காவில் ‘டிராகன்’ கருப்பொருளில் மலர் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 மீட்டர் உயரத்தில் 15 மீட்டருக்கும் மேலான நீளத்தில் மரத்தினால் செய்யப்பட்ட பிரம்மாண்ட டிராகன் உருவம் பார்வையாளர்களின் கவனத்தை இருக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
‘தஹ்லியா ட்ரீம்ஸ்: லெஜெண்ட் ஆஃப் தி டிராகன் கேட்’ (Dahlia Dreams: Legend of the Dragon Gate) என்றழைக்கப்படும் இந்த கண்காட்சியில் சீனப் புத்தாண்டை மையப்படுத்தும் சிங்க நடன உடை அலங்காரங்களும் காங்ஸ் உள்ளிட்ட தாளவகை கண்காட்சி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன (several CNY elements such as lion dance costumes and gongs).
இந்த கண்காட்சியில் 1000திற்கும் மேற்பட்ட 40 வகைகளிலான தஹ்லியா உருவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியின் மலர் அலங்காரங்களை செய்வதற்கு ‘டிமென்ஷியா சிங்கப்பூர்’ நிறுவனத்தை சார்ந்த 30திற்கும் மேற்பட்ட டிமென்ஷியா நோயாளிகளும் பராமரிப்பாளர்களும் உதவியுள்ளனர். இவை பிரம்மாண்ட டிராகனின் செதில்களில் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கரையோரப் பூங்காவின் ஃப்ளவர் டோமில் நடக்கும் இந்த கண்காட்சி வருகிற மார்ச் மார்ச் மாதம் 17ஆம் தேதி வரை இடம்பெறும்.
மேலும் இந்த கண்காட்சியில் மீன்களின் உருவங்கள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய புகைப்படங்கள் எடுக்கும் சாவடிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கண்காட்சிக்காக 13 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடையோருக்கு 12 வெள்ளியும், 60 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடைய மூத்தோருக்கு 8 வெள்ளியும், 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு 8 வெள்ளியும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதற்கான நுழைவுச்சீட்டுகளை https://www.gardensbythebay.com.sg இணையதள முகவரியிலும் பெற்றுக்கொள்ளலாம்.