தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்க நடனத்தில் ஈடுபடும் தமிழ் இளையர்

2 mins read
59f2ade2-ad5d-4452-b7e4-d0c3675c121c
டிராகன் தலையைக் கம்பால் தூக்கிப் பிடித்து நிற்கிறார் ஹவினேஷ்வரன். - படம்: ஹவினேஷ்வரன்
multi-img1 of 2

அனுஷா செல்வமணி

கடந்த நான்கு மாதங்களாக சிங்க நடனக் குழுவில் இருக்கும் ஹவினேஷ்வரன், 12, சிறு வயதிலிருந்தே சீனக் கலாசாரத்திற்கு பழக்கப்பட்டவர்.

தனது குடும்பத்தினர் ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் என்பதை பகிர்ந்த அவர், சிறு வயதில் இருந்தே சிங்க நடனம் மேல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டதாகக் கூறினார்.

“நான் சிறு வயதில் இருந்தே என் குடும்பத்தினர் சீனப் புத்தாண்டுக்கு தயாராவதை பார்த்து வளர்ந்தேன். அதனால் எனக்கு அந்தக் கலாசாரம் மீது நாட்டம் எழுந்தது,” என்று சொன்னார் ஹவினேஷ்வரன்.

ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டின்போது சிங்க நடனக் குழுவினரை தங்களின் வீட்டிற்கு ஹவினேஷ்வரனின் குடும்பத்தினர் வரவழைப்பார்கள். அவர்களின் நடை, உடைகளைப் பார்த்த ஹவினேஷ்வரன் சிங்க நடனக் குழுவில் சேர விரும்பினார்.

ஸ்டாம்ஃபர்ட் கடல்நாக சிங்க கலை மற்றும் கலாசாரக் குழுவில் சேர்ந்த அவரைத் தொடக்கத்தில் பலரும் வியப்புடன் பார்த்தனர்.

ஆனால், ஹவினேஷைப்போல பல தமிழ் இளையர்களும் குழுவில் இருந்ததால் அவருக்கு கடினமாகத் தோன்றவில்லை. அவரின் திறமையைப் பார்த்து சிங்க நடன நண்பர்கள் பிரமித்துப் போனார்கள்.

பள்ளியில் இணைப்பாட நடவடிக்கையாக ஹாக்கியில் ஈடுபட்டு வரும் ஹவினேஷ்வரன் வாரத்தில் ஒரு நாள் சிங்க நடன பயிற்சிக்கு என்று ஒதுக்கி, குழுவுடன் இணைந்து நடன அசைவுகளைக் கற்று வருகிறார்.

சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலங்களுக்கு அப்பாற்பட்டு, சமூக மன்ற நிகழ்ச்சிகள், சிங்கே ஊர்வலம் ஆகியவற்றிலும் பங்கேற்கிறார்.

உடலை வளைத்து நெளிந்து ஆடும் ஹவினேஷ்வரன் இந்தாண்டு கடல்நாக ஆண்டாக இருப்பதால் சீனப் புத்தாண்டுக்காக அவர் கடல்நாக நடன அசைவுகளை ஆடினார்.

sanush@sph.com.sg

குறிப்புச் சொற்கள்