நான் ஆணையிட்டால்

நான் ஆணையிட்டால்

2 mins read
2703174d-b34d-4317-ae00-230df404278d
எம்ஜிஆர். - படம்: ஊடகம்

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் இந்த மாணவர் கவலை பட மாட்டார் பள்ளி பருவத்திலே துள்ளிக் குதிக்கையிலே அவர் இன்ப கடலிலே நீந்திடுவார் (2)

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் இந்த மாணவர் கவலை பட மாட்டார் பள்ளி பருவத்திலே துள்ளிக் குதிக்கையிலே அவர் இன்பக் கடலிலே நீந்திடுவார் (2)

ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் நண்பன் என்றாலும் விட மாட்டேன் (2) நன்கு படிக்கச் சொல்வேன் முயற்சி எடுக்கச் சொல்வேன் அவர் சாதிக்க நானும் துணை இருப்பேன் (நான் ஆணையிட்டால்)

சிலர் தேர்வுக்கும் தோல்விக்கும் பயிற்சிக்கும் முயற்சிக்கும் பயந்து நடுங்கிடுவார் சிறு முயற்சியில்லை அதிக பயிற்சியில்லை அவர் எப்போதும் நடுங்கிடுவார்

வருங்காலத்திலே, என் முயற்சியிலே எந்தன் பள்ளிக்கு நற்பெயர் சேர்த்திடுவேன் இந்த பள்ளியிலே எந்தன் பாதையிலே எல்லோரும் நடந்திட செய்வேன் (2)

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் இந்த மாணவர் கவலை பட மாட்டார் பள்ளி பருவத்திலே துள்ளிக் குதிக்கையிலே அவர் இன்ப கடலிலே நீந்திடுவார் (2)

இங்கு மாணவர் தயங்கவும் திறமைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்? எந்தன் கடமையுண்டு, அதில் கவனம் கொண்டு நான் எப்போதும் விழித்திருப்பேன் முன்பு படித்தவரும் இன்று படிப்பவரும் நற்பெயரை எடுத்திட முயன்றார் என்றும் வீழ்ந்ததில்லை; நாளும் ஓய்ந்ததிலை என்றும் மேன்மை அடைந்திட உழைப்போம் (2)

நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால் இந்த மாணவர் கவலை பட மாட்டார் பள்ளி பருவத்திலே துள்ளிக் குதிக்கையிலே அவர் இன்ப கடலிலே நீந்திடுவார் (2)

ரமேஷ் குமார் ரக்ஷரன் உயர்நிலை 1, இராஃபிள்ஸ் கல்வி நிலையம்

குறிப்புச் சொற்கள்