மாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளம்

மாணவர்களுக்கு பயனுள்ள இணைய தளம்

1 mins read
2a6dbd78-8b1b-4091-ace7-7648c27fbeca
இணையம். - படம்: ஊடகம்

புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள ‘கூகல்’ இணையத்தை நாடுவது முதல், குறிப்பிட்ட ஒன்றை எப்படி செய்வது என தெரிந்துகொள்ள காணொளிகளைக் காண்பது, இணையவழி பாடங்கள் படிப்பது என மாணவர்களுக்கு இணைய பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது.

இணையத்தை கூடுதல் திறமையாக பயன்படுத்த இன்னும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி, கற்றலை எளிதாக்க உதவும் மூன்று இணைய தளங்கள் உங்களுக்காக...

மைக்ரோசாஃப்ட் மேத் சால்வர் (Microsoft Math Solver)

சிறு சிறு கணக்குகள் முதல், தீர்க்கமுடியாத கடினமான கணக்குகள் வரை அனைத்தையும் தீர்க்கவும் தீர்க்கும் வழிமுறைகளை சொல்லித் தரும் வகையிலும் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீன் மீடியன் மோட், ஃபேக்டர், லீனியர் சமன்பாடுகள்(Linear Equation) கடினமான கலப்பு வகுத்தல் (Mixed Fractions), அல்ஜீப்ரா, கால்குலஸ் என அனைத்துக்கும் இதனை உபயோகிக்கலாம்.

சாதாரண கால்குலேட்டர்போல் தோற்றமளிக்கும் இதில், பல்வேறு கணிதக் குறியீடுகளும் உள்ளீடு செய்யும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

கணிதத்தில் ஆர்வம் உள்ள பிள்ளைகள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள https://math.microsoft.com/en இந்த இணையத்தைப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்