நம் அனைவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். விருப்பப்பட்ட துறையில் நன்றாக படித்தால் நம் வாழ்க்கையும் வரலாறு ஆகும். எது வாங்க நினைத்தாலும் அல்லது செய்ய நினைத்தாலும் இவ்வளவு செலவு வரும் என்று கணக்கு செய்வோம். அந்தக் கணக்கு துறையில் தனக்கென ஓர் அடையாளத்தை படைத்தவர் ராமானுஜர்.
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகவில்லை. வரலாறு ஆனவர்கள் எல்லாரும் தனக்கென வாழ்ந்ததில்லை.
பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும்போது, கணித ஆசிரியர் கரும்பலகையில் கணக்குகளை எழுதி அவற்றுக்கான விளக்கத்தைத் தர முயன்று கொண்டிருந்தார். பாடத்தின் இடையில், ஆசிரியர், “எந்த எண்ணையும், அதே எண்ணால் வகுத்தால், கிடைக்கும் பதில் ஒன்றுதான்,” என்றார். 5/5=1, 10/10=1
அவர் சொல்லி முடித்தவுடன் ஒரு மாணவன் அமைதியாக எழுந்து நின்று ஆசிரியரிடம், “அப்படி என்றால், ஜீரோவை, ஜீரோவால் வகுத்தால் கிடைக்கும் விடையும் ஒன்றாக இருக்குமா ஆசிரியர்?” என்று கேட்டான். 0/0=0
ஆசிரியர் திணறிப்போனார். அந்த மாணவன்தான் பின்னாளில், ‘கணித மேதை இராமானுஜர்’ என்று போற்றிப் புகழப்பட்டார்.
33 ஆண்டுகளே வாழ்ந்தபோதிலும், தனது கணிதத் திறமையால் உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.
மேலும், இராமானுஜர் எழுதிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூத்திரம் புரியாமல் உலகில் பல ஆராய்ச்சியாளர் அதனை இன்றும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இன்று நடைமுறையில் இருக்கும் ‘ஏடிஎம்’ இயந்திரத்தில் காசு எடுப்பதும் அவர் எழுதிய சூத்திரத்தினால்தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
அவர் எழுதிய அனைத்து சூத்திரங்களையும் தெளிவாக கண்டு அறிந்தால் இந்த உலகில் விடை தெரியாமல் இருக்கும் பல புதிர்களுக்கு பதில் கிடைக்கும் என்று எல்லோரும் அந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
சூத்திரம் என்றால் விதி அல்லது பார்முலா. அந்த விதிப்படி எதைச் செய்தாலும் விடைச் சரியாக இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்து இங்கிலாந்தில் கணிதத் துறையில் உச்சம் தொட்டவர் இராமானுஜர். இராமானுஜத்தின் கணித அறிவு குன்றில் இட்ட விளக்காய் சுடர்விட்டுப் பிரகாசித்தது.
இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள அறிஞர்களும் இவரது தொடர்பை விரும்பினர் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.
இவரின் வாழ்க்கை வரலாற்றை இராமனுஜர் என்று தமிழில் திரைப்படமாக எடுத்து இருக்கின்றனர்.

