இரண்டாம் உலகப் போரின் முக்கியச் சம்பவங்களை நினைவுகூறும் நிகழ்ச்சிகள்

இரண்டாம் உலகப் போரின் முக்கியச் சம்பவங்களை நினைவுகூறும் நிகழ்ச்சிகள்

1 mins read
3da50746-bc8c-4b2a-a2e3-7b116e24afe5
‘போனவிஸ்தா’ மிதிவண்டி சுற்றுலா - படம்: தேசிய மரபுடைமைக் கழகம்

பிப்ரவரி 8, 1942ஆம் தேதி சிங்கப்பூரில் காலடி எடுத்துவைத்த ஜப்பானியர்கள், ஏழே நாள்களில் பிப்ரவரி 15, 1942ஆம் தேதியன்று சிங்கப்பூரை முழுமையாகக் கைப்பற்றினர்.

பாசிர் பாஞ்சாங், புக்கிட் சாண்டு போன்ற பகுதிகளில் நடைபெற்ற முக்கிய யுத்தங்களை மீண்டும் உங்கள் கண்முன் கொண்டு வருகின்றன பிப்ரவரி 17 முதல் மார்ச் 3 வரை தேசிய மரபுடைமைக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகள்.

அவற்றுக்கு museums.com.sg இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.

சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளில் சில:

‘சிங்கப்பூரின் போர்க்கதை’: சிறுவர் சுற்றுலா இடம்: ‘பேட்டில்பாக்ஸ்’ (முன்பு ஃபோர்ட் கேனிங் பதுங்குகுழி) வயது: 9 முதல் 14 வயது வரை கட்டணம்: $15

சுற்றுலா மூலம் போர்க்கதைகளை வரலாற்றாசிரியர்களின் கண்ணோட்டங்களிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாம் உலகப் போர் விளையாட்டுப் பொருள்கள் சுற்றுலா, போர் விமானம் செய்யும் பயிலரங்கு

இடம்: ‘மிண்ட்’ விளையாட்டுப் பொருள் அரும்பொருளகம் வயது வரம்பில்லை. கட்டணம்: $25 (சிறுவர்களுக்கு, முதியோருக்கு), $35 (பெரியோருக்கு) இரண்டாம் உலகப் போர் விமானங்கள், கப்பல்களைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா? உங்கள் சொந்த இரண்டாம் உலகப் போர் விமானத்தை நீங்களே செய்யலாம்!

முதியோரின் கதைகள்

இடம்: தேசிய அரும்பொருளகம் வயது வரம்பில்லை. கட்டணம்: அனுமதி இலவசம், ஆனால் முன்பதிவு தேவை முதியோரின் போர்க்கால நினைவுகளை உணவு உண்டவாறே கேட்கலாம்.

‘போனவிஸ்தா’ மிதிவண்டி சுற்றுலா

வயது வரம்பில்லை. கட்டணம்: $35 போனவிஸ்தாவில் தொடங்கி ஹாவ் பா வில்லாவில் நிறைவடையும் இச்சுற்றுலா, போர் நடந்த முக்கிய இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

மொத்தம் 25க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் 70க்கும் மேற்பட்ட சுற்றுலாக்களும் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்