நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் பொதுமக்களை மகிழ்வித்தது சிங்கப்பூர் விமானக் காட்சி 2024.
இரு நாள்களிலும் எதிர்பார்த்ததைப் போலவே 60,000 பேர் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
இவ்வாண்டு சிங்கப்பூர் விமானக் காட்சியின் வான் அங்கங்களில் வரலாற்றிலேயே ஆக அதிகமான வெளிநாட்டு விமானப் படைகள் பங்குபெற்றன.
சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, கொரியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளின் ஆகாயப் படைகள் வான் சாகசங்களைக் கண்டு சிறுவர்கள் மகிழ்ந்தனர்.
சிங்கப்பூர் ஆகாயப் படையின் எஃப்-15எஸ்ஜி, ஏஹெச்-64டி ரக விமானங்கள், நான்கு ஒருங்கிணைந்த சாகசங்களோடு மொத்தம் 12 சாகசங்களைப் படைத்து மக்களை மகிழ்வித்தன.
நிலத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பன்னாட்டு விமானங்களைக் கண்டு, அவற்றில் ஏறி அமர்ந்து புகைப்படம் எடுத்து பார்வையாளர் குடும்பங்கள் மகிழ்ந்தன.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்களின் வினாக்களுக்கு விடையளித்தனர் சிங்கப்பூர் ஆகாயப் படையினர்.

