ஒரு வாரம் பள்ளி விடுமுறை தொடங்க இருக்கிறது. மாணவர்கள் கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து ஆக்கபூர்வமாக விடுமுறையைப் பயன்படுத்த வேண்டும்.
சிங்கப்பூரில் பல இடங்களில் பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டு உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றன. அங்கு சென்று விளையாடி மகிழலாம்.
மாணவர்களுக்காக பல விடுமுறைக் கால நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.
அல்லது விரைவில் இடம் மாற இருக்கும் ஆமை அருங்காட்சியகத்துக்குச் சென்று வரலாம்.
லோரோங் செஞ்சாருவில் உள்ள ‘லைவ் டர்டில் & டார்டாய்ஸ்’ அருங்காட்சியகத்திற்கு நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி சென்று இலவசமாக ஆமைகளைப் பார்த்து அவற்றிற்கு உணவளித்து மகிழலாம்.
அங்கு 30 இனத்திற்கும் மேற்பட்ட 300க்கும் அதிகமான ஆமைகள் உள்ளன.
இந்த அருங்காட்சியகம் விரைவில் வேறு இடத்திற்குச் செல்ல இருப்பதால் உங்களால் முடிந்த அளவிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ளலாம்.