சிறார்களை கவரும் செந்தோசாவின் புதிய சென்சரிஸ்கேப் (sensoryscape)

செந்தோசா தீவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கிறது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலாத்தலமான சென்சரிஸ்கேப்’ (sensoryscape)  

இம்மாதம் 14ஆம் தேதி (மார்ச் 14) அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ள இந்த தலத்தில் 350 மீட்டர் நீளமுள்ள நடைபாதையும் இயற்கை, தொழில்நுட்பம், கட்டடக்கலை ஆகியவற்றை இணைக்கும் உயரமான புலன்சார் தோட்டங்களும் உள்ளன. இந்த தலம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.   

தீவின் வடக்கில் உள்ள ‘ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா’வையும் (Resorts World Sentosa (RWS)) தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரைகளையும் இணைக்கும் இந்த சுற்றுலாத்தலம் ஏறக்குறைய 2800 மீட்டர் பரப்பளவைக் கொண்டது. 

இந்த 90 மில்லியன் டாலர் சென்சோரிஸ்கேப், ரிசார்ட் தீவு (resort island) மற்றும் அதை ஒட்டிய புலாவ் பிரானியை (Pulau Brani) முதன்மை சுற்றுலாத்தலமாக மாற்றியமைக்கும் நீண்ட கால ‘செந்தோசா-பிரானி மாஸ்டர் பிளான்’ (Sentosa-Brani Master Plan) திட்டத்தின் ஓர் அங்கமாகும். 

இத்தலத்தின் புத்தாக்க அம்சங்களில் ஒன்று ‘இமேஜிநைட்’ (ImagiNite) எனப்படும் இரவு நேர அனுபவம். ஒவ்வொரு நாளும் இரவு 7.50 மணிக்கு தொடங்கி 9.40 வரை செயல்படும் இதில் இரவு நேர ஒளிக் காட்சிகள், நடைபாதை முழுவதும் மின்னிலக்க தரை ஏற்பாடுகள் (Digital floor projections) போன்றவை இடம்பெறும். மேலும் ‘இமேஜிநைட் கைப்பேசி செயலி’யை பயன்படுத்தி ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பக் கூறுகளை பார்வையாளர்கள் அணுக முடியும். 

சென்சரி நடைபாதை பயனர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு ஏதுவான சாய்வுதளங்களும் மின்தூக்கிகளும் உள்ளன. தோல்வார்(leash) கொண்டு அழைத்துச்செல்லப்படும் செல்லப் பிராணிகளும் இத்தலத்தில் அனுமதிக்கப்படும். 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!