குளம், கிணறுகளில் காசு வீசுவதன் அறிவியல் காரணம்

குளம், கிணறுகளில் காசு வீசுவதன் அறிவியல் காரணம்

1 mins read
ab2346e4-62bf-4d08-a394-22852899af21
நாணயங்கள். - படம்: ஊடகம்

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய காசுகள் ஏற்படுத்திய சடங்குகள் பலவற்றில் இருக்கும் அறிவியல் பூர்வமான உண்மை என்னவென்று தெரியாமலே நாம் அதை செய்து கொண்டிருக்கிறோம்.

அதில் ஒன்றுதான் குளங்களில் காசு வீசும் சடங்கு. இச்செயலுக்கு பின்னே இருக்கும் அற்புதமான உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பழங்காலத்தில் நமது முன்னோர்கள் பெரும்பாலும் பயன்படுத்திய பொருள்கள் அனைத்துமே செம்பு உலோகத்தால்தான் செய்யப்பட்டன.

குறிப்பாக நீர் அருந்துவதற்கும் குளிப்பதற்கும் செம்பு பாத்திரத்தில் இருக்கும் நீரையே உபயோகித்தனர். இதனால் உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோதிடம் போன்றவை நம் முன்னோர்களுக்கு அதிகம் இருந்தது.

இதேபோல் அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய நாணயங்கள் அனைத்தும் செம்பு உலோகத்திலேயே செய்யப்பட்டன. எனவே குளத்தில் இருக்கும் நீரை சக்தி வாய்ந்ததாக மாற்றவும் தங்களிடமிருந்த செம்புக் காசுகள் சிலவற்றை அக்குளத்தில் வீசும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர்.

இப்படி பலரும் வீசிய செம்புக் காசுகள் கோயில் குளத்தில் நன்கு ஊறி, அந்த செம்பில் இருக்கும் சத்துக்கள் அந்த நீரில் கலப்பதால் அந்த நீரில் கிருமிகள் வளர்வதை தடுத்ததோடு, அக்குளத்தின் நீரைக் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தியவர்களுக்கு ஆரோக்கியத்தை தந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்