தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயிறா? உண்டியலா

2 mins read
2150a3f6-431e-4b6e-8f1a-b0b5e6b3751b
காசுகளை விழுங்கிய முதலை. - படம்: ஊடகம்

வயிறா? உண்டியலா?

விலங்குகளின் வடிவத்தில் உண்டியல் இருப்பதைப் பார்த்திருப்போம். அதிலும் உண்டியல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பன்றி வடிவத்தில் இருக்கும் உண்டியல் (pigs bank)தான். ஆனால், இங்கு உயிருள்ள ஒரு விலங்கின் வயிற்றில் உண்டியல் போலப் பல நாணயங்கள் இருந்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் முதலையின் வயிற்றில் 70 நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன.

அமெரிக்காவின் நெப்ராகத்தா மாநிலம், ஓமாகா நகரத்தில் உள்ளது ஹென்றி டோர்லி உயிரியல் பூங்கா.

மீன்கள் கண்காட்சி மையத்தில் வளர்ந்து வரும் உயிரினங்களுக்கு வழக்கம்போல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்‌ரே ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

அதில் 36 வயதான தியோடாக்ஸ் என்ற முதலையின் வயிற்றில் உலோகம் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தியோடாக்ஸ் முதலைக்கு மயக்க மருந்து கொடுத்து, வயிற்று வழியாக கேமராவின் உதவியுடன் 70 அமெரிக்க நாணயங்கள் கண்டறியப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்துத் தங்களது சமூக வலைத்தளத்தில் உயிரியல் பூங்கா நிர்வாகம் பதிவிட்டுள்ளது.

முதலைக்குச் சிகிச்சைப் பார்த்த கால்நடை மருத்துவர் டாக்டர் கிறிஸ்டினா ப்ளூக் இதுகுறித்து, “பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் முதலை இருக்கும் தண்ணீரில் நாணயங்களைப் போடுகின்றனர். இதன் காரணமாக நாணயங்களை முதலை விழுங்கியுள்ளது,” எனத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் தண்ணீர் இருக்கும் பகுதிகளில் நாணயங்களைப் போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்