தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரிவர் வொண்டர்ஸின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

2 mins read
9839c5a3-afdd-4f3b-8eb3-f2a1387ce4ef
ரிவர் வொண்டர்ஸ். - படம்: வனவிலங்கு காப்பகம்.

வார இறுதி நாட்களில் என்ன செய்வது என்று தெரியவில்லையா? விலங்குகள் பிடிக்குமா? அல்லது விளையாட்டுகள் பிடிக்குமா? இல்லையெனில் இரண்டுமே பிடிக்குமா? அப்படி என்றால் உடனே 10ஆம் ஆண்டுவிழாவை கொண்டாடும் ரிவர் வொண்டர்ஸின் அதிசயங்களுக்குச் செல்லுங்கள்!

அங்கு உற்சாகம் தூண்டக்கூடிய பல நிகழ்வுகள் பிப்ரவரி 28 முதல் நடைபெறுகின்றன. ‘பிங்கோ விளையாட்டு’, ‘இலவச விலங்கு டாட்டு’, ‘விலங்கு பராமரிப்பாளர்கள் சந்திப்பு’, ‘வனவிலங்கு மற்றும் இயற்கை பற்றிய விளையாட்டு’, ‘குடும்பத்தினருடன் கூடாரம் கட்டுதல்’, ‘மானாட்டிகள் மற்றும் பிற வனவிலங்குகள் சந்திப்பு’ போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பிரத்தியேக உறுப்பினர்களுக்கும் பல சலுகைகள் உள்ளன!

2014ல் தொடங்கிய ரிவர் வொண்டர்ஸ் இவ்வாண்டு 10ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது. அதனை ஒட்டி பல சலுகைகள் வழங்குகின்றது.

ஒவ்வோர் பெரியவர் நுழைவுச்சீட்டுக்கும் இரண்டாவதாக வாங்கும் நுழைவுச்சிட்டு 10 வெள்ளி மட்டுமே. இச்சலுகை பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 14 வரை மட்டுமே நடப்பில் இருக்கும்.

உலக ஆட்டிசம் மாதத்திற்கு ஆதரவாக, ரிவர் வொண்டர்ஸ் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஏப்ரல் 6 (சனிக்கிழமை) மற்றும் ஏப்ரல் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திறக்கப்படுகின்றது.

அங்கு இருக்கும் செயல்பாட்டுச் சாவடிகள் விருந்தினர்களுக்காக காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை, காட்சி அட்டவணைகளோடு சிறப்பாகத் திட்டமிடப்பட்ட செயல்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்ய ரிவர் வொண்டர்ஸ் இணையத்தளத்திற்குச் செல்லவும்.

பத்து ஆண்டு நிறைவை கொண்டாடும் ரிவர் வொண்டர்ஸுக்கு ஆதரவு அளித்து மகிழுங்கள்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்