தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டது

1 mins read
83b12d67-b7d6-4620-81fc-9e4ce415ad3b
தங்கம் விலை அதிகரித்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் தங்கம் விலை நேற்றைய காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.560 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.2,000க்கும் மேல் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.6430க்கும், ஒரு சவரன் ரூ. 51,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.70 அதிகரித்து ரூ.6,500க்கும், ஒரு சவரன் ரூ. 52,000க்கும் விற்பனையாகிறது.

செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவையுடன் சேர்த்து ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.54,000க்கும் மேல் விற்பனையாவது கவலை அளிப்பதாக மக்கள் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்