தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களுக்கு இணையாக துள்ளிக் குதிக்கும் நம் பிரதமர்

2 mins read
1adda5ce-b086-496e-bf08-164f3de5aec5
மாணவர்களுக்கு இணையாக துள்ளிக் குதிக்கும் நம் பிரதமர் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகனும் ஆவார்.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பிறகு இவரின் தந்தை ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டன. வளைந்து கொடுக்காத சட்டங்களால் நாடே நடுங்கிப் போனது.

அந்த இக்கட்டான சூழலில் இவரின் தந்தை காலஞ்சென்ற திரு லீ குவான் யூ, “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். ஆரம்பத்தில் ஒரு கசப்பான பானமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்,” என்று கூறினார்.

அதற்கு ஏற்ப சிங்கப்பூரை மெருகேற்றி பிற நாடுகள் வியக்குமளவிற்கு தலைசிறந்த பிரதமராகக் கடந்த 20 ஆண்டுகள் நாட்டை வழிநடத்தி வருகிறார் திரு லீ.

மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலிருந்து மூன்று பெரிய வெள்ளை நிற ராட்சத குழாய்களின் மூலம் சிங்கப்பூர் 100 விழுக்காடு நீரைப் பெற்று வந்தது.

ஆனால், இப்போது சிங்கப்பூர் 50 விழுக்காட்டுக்கும் மேல் சொந்தமாக மக்களுக்குத் தண்ணீர் வழங்குகிறது என்பதிலிருந்தே திரு லீயின் தொலை நோக்குப் பார்வையுடன் அவர் கையாண்ட நீர் மேலாண்மைத் திட்டம் புலப்படும்.

இவர் கையாளும் பாணியே தனிதான். இவரின் அரசதந்திர பேச்சுக்கள், கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்வதில் பருவநிலை மாற்றம், தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு போன்ற சிக்கல்களைச் சமாளிக்க அண்டை நாடுகளுடனும் உலகளாவிய பங்காளிகளுடன் இணைந்து சிறந்த திட்டங்களைத் தீட்டி தீர்வுகண்டார் என்றால் அது மிகையாகாது.

சிங்கப்பூரர்களுக்கு மருத்துவமனைகளும் மருத்துவ வசதிகளும் எட்டாக்கனியாக இல்லாமல் உள்ளங்கை நெல்லிக்கனியாய் மாற்றிய பெருமை இவருக்கே உண்டு!

தொடர்புடைய செய்திகள்

திரு லீ சியன் லூங் ஒரு பிரதமர் மட்டுமல்லர். அவர் ஒரு தொலைநோக்குடைய தலைவர், ஒரு பருவநிலை போர்வீரர், ஒரு கல்வி சீர்திருத்தவாதி, ஒரு சுகாதாரப் போராளி, சிறந்த அரசதந்திரி போன்ற பன்முகத்தன்மையோடு விளங்கிக் கொண்டிருக்கிறார்.

மாணவர்களுடன் மாணவனாக துள்ளிக் குதிக்கும் எங்கள் பிரதமருக்கு மாணவர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியாவிடைபெறும் திரு லீ சியன் லூங் அவர்களுக்கு அவரின் பிரியமான மாணவர்களான நாங்கள், எல்லாம் வல்ல இறைவனிடம் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டுகிறோம்.

பா. சுஹந்தன் தொடக்கநிலை ஆறு கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்