பிரதமர் திரு லீ சிங்கப்பூரின் 3வது பிரதமராக 2004ஆம் ஆண்டு பதவியேற்றார்.
“பிரதமர் லீ தாம் மேற்கொள்ளும் எந்தக் காரியத்திலும் சிங்கப்பூரர்களை மனதில் வைத்தே செயல்படுவார்.
“சிங்கப்பூரில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டிருப்பதற்கு அவரின் அயராத உழைப்பே காரணம்.
“கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் பல நல்ல மாற்றங்களைச் சந்தித்துள்ளனர்.
“மக்களின் வாழ்க்கைத்தரம், வீடு, சுகாதாரம், கல்வி என்று பல துறைகளில் நல்ல முன்னேற்றம் அடைந்ததற்கான எல்லாப் பெருமையும் திரு லீயைச் சேரும்.
“புத்திக்கூர்மை, நம்பகத்தன்மை, பணிநெறிமுறைகள் போன்றவற்றின் மூலம் ஒரு நாட்டின் தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்குத் திரு லீ ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
“காலஞ்சென்ற திரு லீ குவான் யூ அவர்களின் ஆளுமை, தலைமைத்துவத் திறனைத் தன்னகத்தே பெற்றிருக்கிறார் நம் பிரதமர்.
“பிரதமரும் அவரைச் சேர்ந்த அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து நம் சிங்கை நாட்டை உலக அரங்கில் முன்னுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
இவரின் தந்தையைப்போலவே இவரும் மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறார்,” என்று என் தந்தை கூறினார். அத்தகைய பெருமை வாய்ந்த அந்தத் தலைவருக்கு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறேன்.
அத்வைத், தொடக்கநிலை 5, கார்ப்பரேஷன் தொடக்கப் பள்ளி