தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக அரங்கில் தனித்துவம் வாய்ந்த நாடாக சிங்கப்பூர்

1 mins read
2c3fb442-38cb-4af2-80d7-3ae27f951652
மக்களுடன் திரு லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிரதமர் லீயைப் பற்றி நான்கு முக்கிய நிகழ்வுகளை என் பெற்றோர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அதை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கிறேன்.

சிங்கப்பூரின் எதிர்காலம்: பிரதமர் லீ தம்முடைய சிறந்த பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் மூலம் சிங்கப்பூரின் பொருளாதாரத்தை மேம்படுத்தினார்.

இரு துருவங்களை இணைத்தது: கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டிருந்த நிலையற்ற தன்மையைச் சீராக்க அமெரிக்க-வடகொரிய அதிபர்களின் சந்திப்பைச் செம்மையாக நடத்திக்காட்டினார்.

மாறிவரும் பருவநிலை: தொலைநோக்குப் பார்வையுடன் மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல்நீர் மட்ட உயர்வைச் சமாளிக்க ‘நீண்ட தீவு’ உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தால் எதிர்கால சந்ததியினர் கடல் மட்ட உயர்வைத் திறமையாகக் கையாளலாம்.

கொவிட்-19 தடுப்பூசி: கொவிட்-19 நோய்ப் பரவலால் ஏற்பட்ட விளைவுகளைச் செம்மையாகக் கையாண்டு பெரும் உயிர்ச்சேதம் ஆகாமல் தடுப்பூசியை விரைவாகச் சிங்கப்பூருக்கு வரவழைத்து நாட்டுமக்களைக் காப்பாற்றினார்.

அவருடைய தலைமையின்கீழ் சிங்கப்பூர் உலக அரங்கில் தனித்துவம் வாய்ந்த நாடாக விளங்குகிறது என்றனர் என் பெற்றோர்.

அவர்கள் கூறுவதைக் கேட்கும்போது நாம் எத்தகைய நல்ல தலைவர்கள் உள்ள நாட்டில் பிறந்திருக்கிறோம் என்று பெருமையாக இருக்கிறது. நம் பிரதமருக்கு வாழ்த்துகள்!

விஷாகன், தொடக்கநிலை 5, கார்ப்பரேஷன் தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்