உலகத்தில் பல நாடுகளில் போர், கலவரம், வெள்ளம் என்று மக்கள் பல துயரங்களை அனுபவிக்கின்றனர்.
ஆனால், அவற்றை நாம் செய்திகளில் மட்டும் கேட்டு, படித்துத் தெரிந்துகொள்கிறோம். அந்த அவலங்கள் நம் சிங்கப்பூரில் ஏற்படாதவண்ணம் திரு லீயும் அவருடைய அமைச்சர்களும் இணைந்து நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.
கொவிட்-19 தொற்றுநோயையும் அதனைத் தொடர்ந்து வந்த பொருளியல் மந்தநிலையையும் களைய பல திட்டங்கள் தீட்டி அயராமல் உழைத்தீர்கள்.
சிங்கப்பூரர்களின் நம்பிக்கைக்குத் தகுதியான தலைமைக் குழுவைத் தயார் செய்திருப்பதாக நீங்கள் அண்மையில் கூறினீர்கள். அது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
எங்கள் பிரதமர் லீ சியன் லூங் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனிகா மாதவன் உயர்நிலை 2, பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

