“காலமெல்லாம் பிரதமரின் கவனம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதே என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம் அண்மையில் தெரிவித்து இருந்ததைப் படித்தேன்.
உலகம் முழுவதும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால் சிங்கப்பூரில் அதுபோன்று நான் கேள்விப்பட்டதே இல்லை.
அந்த அளவுக்கு சிங்கப்பூரை வழி நடத்துகிறீர்கள் நீங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அமைச்சர்களும்.
கொவிட்-19 கொள்ளைநோய் வந்தபோது மாணவர்களின் மேல் உள்ள அக்கறையினால் வீட்டில் இருந்தபடி கல்வி பயில பல நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்தீர்கள்.
நான் ஒரு பாதுகாப்பான நாட்டில் இருக்கிறேன். இரவு எந்த நேரத்திலும் தைரியமாக வெளியே சென்று வர முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்த எங்கள் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பரீத் உயர்நிலை 2, பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

