நாங்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே சிங்கப்பூரின் பிரதமராக இருந்து வந்துள்ளீர்கள். கொவிட்-19 காலகட்டதில் சிங்கப்பூர் சிறப்பாகவும் துரிதமாகவும் செயல்பட்டதற்கு நீங்களும் உங்கள் சக அமைச்சர்களுமே காரணம்.
நாம் மீண்டும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்குச் செல்வோமா என்று சந்தேகமாக இருந்தது. வெகு விரைவில் அந்த நோயை நாட்டை விட்டே விரட்டியது உங்கள் குழு. இப்போது நாங்கள் சுதந்திரமாக மூச்சுவிட நீங்களே காரணம்.
நீங்கள் வகுத்த திட்டங்களால்தான் சிங்கப்பூர் மக்கள் நலமாகவும் வளமாகவும் சுகாதாரமாகவும் வாழ்கிறோம்.
தமிழ்மொழிக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதற்கும் சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் நீடித்து இருப்பதை உறுதி செய்யும் உங்களுடைய குழுவுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேஷவ் தொடக்கநிலை 6 பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளி

