என் அம்மா அன்பானவர். அம்மா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னை கண்ணின் மணி போல் பார்த்துக்கொள்வார்.
எப்போதும் என் மீது அக்கறை காட்டுவார். நான் வீட்டுப் பாடம் செய்ய எனக்கு உதவுவார். எனக்கு உடலம்நலம் சரியில்லாதபோது என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக்கொள்வார்.
நாங்கள் இருவரும் சதுரங்கம், பூப்பந்து, பரமபதம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவோம்.
எனக்குப் பிடித்த உணவை சமைத்துத் தருவார். அவர் என் மீது வைத்திருக்கும் அன்பு உயர்வானது. பதிலுக்கு நான் நன்றி சொன்னால் போதாது.
என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளைச் செய்வேன். நான் பெரியவனாக வளர்ந்ததும் என் தாயார் என்னை கவனித்துக்கொண்டது போல் நானும் அவரை கவனித்துக்கொள்வேன். என் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துகள்
கிரிஷ் கோவிஷ் தொடக்கநிலை 3 அலெக்சாண்டிரா தொடக்கப் பள்ளி

