சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங், 51, இம்மாதம் 15ஆம் தேதியன்று அதிபர் தர்மன் சண்முகரத்னம், தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
இஸ்தானா திடலில் நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள், தொழில்துறைத் தலைவர்கள், விளையாட்டாளர்கள், கலைஞர்கள், சமூகத் தொண்டூழியர்கள், முன்களப் பணியாளர்கள் என கிட்டத்தட்ட 900 பேர் கலந்துகொண்டனர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம், திரு லாரன்ஸ் வோங்கிடம் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை வழங்கினார்.