தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல் உயிரினங்களைப் பற்றி ‘கடல் விழாவில்’ கற்றுக்கொள்ளுங்கள்

2 mins read
9a954d84-d89c-4a44-bd53-8b852e0640e1
கடல் வாழ் உயிரினங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான நிகழ்ச்சி மே 20 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறும். - படம்: கவிந்திரன்

கடல்கள் பற்றி ஆர்வம் உண்டா? அதில் வாழும் உயிரினங்கள் பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமா? அவ்வாறு எனில் ‘சீ அக்வேரியம்’ ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் ‘கடல் விழா’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள். 

‘எதிர்காலத்தைச் சரிசெய்வது’ என்ற கருப்பொருளில், மே 20 முதல் ஜூலை 19ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் புகைப்படம், காணொளி, விளையாட்டு என்ற அம்சங்களின் கீழ், மூன்று கண்காட்சிகள் இடம்பெற்று உள்ளன.    

உலகளாவிய விருது பெற்ற புகைப்படக் கலைஞர் டோஹ் சிங் ஜீ, சிங்கப்பூரின் நீர்வாழ் மண்டலத்தில் வாழும் உயிரினங்கள் பற்றிய புகைப்படக் காட்சியகத்தை அமைத்துள்ளார். 

10 புகைப்படங்களை எடுத்து இந்தக் கண்காட்சியில் காட்சிக்கு வைத்துள்ள அவர், “சிங்கப்பூர் கடல் பரப்புகளில் சென்றபோது, அங்கே அவ்வளவாக வெளிச்சம் இல்லை. மிகச் சிறிதாக இருக்கும் அரியவகை உயிரினங்களைச் சரியான நேரத்தில் படம்பிடிக்க முடியாமல் போனது.

“இந்த ஆண்டு கடல் விழாவில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியின் மூலம், உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாராட்டவும் பாதுகாக்கவும் மேலும் ஊக்குவிக்கவும் முடியும் என நம்புகிறேன்,” என்றார்.  

சக சிங்கப்பூரர்களின் கனவுகளையும் கடலைப் பற்றிய நினைவுகளையும் கண்டறிய ஒரு தனித்துவமான காணொளி, சிங்கப்பூரில் வசிக்கும் மக்களால் காட்சிப்படுத்தப்படும்.

அது கடலுடன் அவர்களுக்கு இருக்கும் அனுபவங்களைப் பிரதிபலிக்கும்.

புதுமையான ஆர்கேட் விளையாட்டு பற்றிய தகவல்கள்.
புதுமையான ஆர்கேட் விளையாட்டு பற்றிய தகவல்கள். - படம்: கவிந்திரன்

ஒரு புதுமையான ஆர்கேட் விளையாட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறு சுழற்சி செய்யப்பட்ட குப்பைகளில் இருந்து இவ்விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில், தொழில்துறை நிபுணர்களிடம் இருந்து தனித்துவமான உயிரினங்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.  

இந்த விளையாட்டின் நோக்கம், கடல் மற்றும் அதன் பல்லுயிர் உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதாகும்.

நிபுணர்களின் கருத்துகளைப் பங்கேற்பாளர்கள் கேட்டறிய வாய்ப்பும் உள்ளது.
நிபுணர்களின் கருத்துகளைப் பங்கேற்பாளர்கள் கேட்டறிய வாய்ப்பும் உள்ளது. - படம்: கவிந்திரன்

மே 18, மே 25, ஜூன் 21 ஆகிய தேதிகளில் பார்வையாளர்கள் ஆசிய-பசிபிக்கைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்களிடமிருந்து நீருக்கடியில் இருக்கும் உலகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

நுழைவுச்சீட்டுகளை வாங்க ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா இணையத் தளத்தை நாடலாம். 

குறிப்புச் சொற்கள்