நெருப்பு நிறைந்த எரிமலை!
குளிர் நிறைந்த பனிமலை!
விலங்குகள் நிறைந்த காடு!
மேகங்கள் நிறைந்த வானம்!
காற்றுடன் உறவாடும் மரங்கள்!
அலைகளைக் கொண்ட கடல்!
நிலவால் நிறைந்த இரவு!
சூரியனால் மிளிரும் பகல்!
தொடர்புடைய செய்திகள்
வாசம் வீசும் மலர்த்தோட்டம்!
ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி!
வளைந்து நெளிந்தோடும் நதி!
பெய்து மகிழ்விக்கும் மழை!
பரந்து விரிந்துள்ள நிலம்!
என்னே அதிசயம்! எல்லாம் அற்புதம்!
இயற்கையைக் கண்டு ரசிக்கிறேன்!
நினைத்து நினைத்து வியக்கிறேன்!
- சாரு சரத்,
உயர்நிலை இரண்டு, பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

