எறும்புகள் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு பூச்சியினம். எறும்புக்கு உறவி, இறும்பி, எறும்பி என பல விதமான பொதுப் பெயர்கள் உள்ளன.
தேனெறும்பு, பருந்தலை எறும்பு, பனங்கட்டி எறும்பு, பிள்ளையார் எறும்பு, கட்டெறும்பு என உலகம் எங்கும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான எறும்பு வகைகள் உள்ளன.
ஓர் எறும்பு தன் எடையைவிட 30 அல்லது 40 மடங்கு எடையைச் சுமக்கும் சக்தி கொண்டது. எறும்புகளுக்குக் காது இல்லை. ஆனால், இரு வயிறுகள் உள்ளன என்பது வியப்புக்குரிய தகவல்.
சாதாரண எறும்புகள் 90 நாள்களும் கறுப்பு நிற பெண் எறும்புகள் 15 ஆண்டுகள் வரையும் உயிர் வாழும்.
குழுக்களாக வாழும் தன்மை கொண்ட எறும்புகள் உணவு தேடச் செல்லும்போது ‘பீரோமோன்’ (Pheromone) எனும் ரசாயனத்தை வழிநெடுக விட்டுச்செல்லும்.
இதனால் முதலில் செல்லும் எறும்பின் ரசாயனத்தை அதனைப் பின்தொடர்ந்து செல்லும் எறும்புகளும் நுகர்ந்தபடியே தொடரும். தானும் ரசாயனத்தை விட்டுச் செல்லும்.
இதனால் அனைத்து எறும்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக சாரை சாரையாக ஊர்ந்து செல்கின்றன.

