தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் விளையாட்டுகள்

2 mins read
78f6823b-2bad-463d-83f6-59166d76dcd9
படம் - இணையம்
multi-img1 of 2

கல்வி கற்பதையும் தாண்டி மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் வகையில் இசை, நடனம், சமையல் என பல கலைகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு துணை புரியும் தொழில்நுட்பக் கருவிகளும் விளையாட்டுப் பொருள்களும் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படுகின்றன.

இசை ஆர்வத்தைத் தூண்டும் ‘விடெக் கிடி ஸ்டார் டிஜே மிக்சர்’

‘டிஸ்க் ஜாக்கி’ எனப்படும் இசை சார் திரையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப விளையாட்டுக் கருவி ‘விடெக் கிடி ஸ்டார் டிஜே மிக்சர்’.

2,000க்கும் மேற்பட்ட ஒலி சேர்க்கைகளைக் கொண்ட இந்தக் கருவியால், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒலி சேர்க்கைகளை தனிப்பயனாக்கம் செய்துகொள்ளலாம். இது மாணவர்களின் படைப்பாற்றலை சோதித்துக்கொள்ள உதவுகிறது.

மேலும், புளூடூத் வசதி மூலம் பிற சாதனங்களை இணைப்பது, ஹெட்ஃபோன்களை இணைப்பது போன்ற அம்சங்கள், இதனை இன்னும் சிறந்த விளையாட்டுப் பொருளாக்குகின்றன.

வரைகலை, வடிவமைப்பு ஆர்வத்தைத் தூண்டும் ‘கிக்ஸ்டார்ட் கிரியேட்டிவிட்டி’ 

‘கிக்ஸ்டார்ட் கிரியேட்டிவிட்டி’, 50 சிட்டுகளுடன் வரும் வடிவமைப்பு விளையாட்டு. மாணவர்களுக்கு எதிர்பாராத சிந்தனைகளைத் தூண்டும் வகையிலான கேள்விகள்/சவால்கள் அமைந்த விளையாட்டுப் பொருள் இது.

புதிய திறனைக் கற்கவும் உலகைப் புதுமையான கண்ணோட்டத்தில் பார்க்கவும் இது உதவுகிறது. படைப்புச் சுதந்திரத்தைத் தூண்டும் இந்த விளையாட்டைத் தனியாகவோ குழுவாகவோ விளையாடலாம்.

சமையற்கலை ஆர்வத்தைத் தூண்டும் மாஸ்டர் செஃப்

சமையல், கலை என்பதைத் தாண்டி, அறிவியல் எனும் நிலைக்கு மாறியுள்ளது. மாணவர்கள் உண்மையான உணவு, சிற்றுண்டிகளைத் தயாரிப்பதற்கான விரிவான, படிப்படியான வழிமுறைகளைக் கொண்ட 90 பக்க புத்தகத்துடன் 24 சுவையான சமையல் குறிப்புகளை உள்ளடக்கிய இந்த விளையாட்டு, சமையற்கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சிறந்தது.

சமையலின் வேதியியல், உணவு இணைவு, சுவை விவரங்கள் என பலவற்றை அறிய முடிகிறது. இத்துடன் கொடுக்கப்படும் ‘ஆக்மெண்டட் ரியாலிட்டி’ கண்ணாடி, புத்தகத்தில் இருக்கும் சமையல் குறிப்புகளைக் காணொளிகளாகக் காண உதவுகிறது.

கரண்டி, அளவு கலன்கள், உடை அழுக்காகாமல் முன்புறம் கட்டும் துணி (ஏப்ரன்), தொப்பி உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான உபகரணங்களுடன் வரும் இந்த அமைப்பு, ஒரு முழுமையான சமையல் கலைஞர் எனும் உணர்வைத் தருகிறது.

குறிப்புச் சொற்கள்