‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்’

‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்’

2 mins read
b13a97f6-22d2-47eb-97f9-4003120b60e9
படம்: - இணையம்

அலுவலகத்தில் கூடுதல் நேரம் பணி புரிந்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார் கவின். தூக்கக் கலக்கத்துடன் மின்தூக்கி திறப்பதற்காகக் காத்திருந்தார்.

சற்று நேரத்தில் மின்தூக்கியின் கதவு திறந்ததும் மிகவும் பழக்கப்பட்ட ஒரு முகத்தைப் பார்த்தார்.

“முரளி, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்றும் கேட்டார்.

முரளி கவினைத் தள்ளி விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் ஓடினான்.

காவலர்கள் மாடிப்படியில் ஓடி வந்தார்கள். அவர்கள் முரளியைத் துரத்தினார்கள்.

முரளி ஓடும் அவசரத்தில் ஒரு பையைத் தவறவிட்டு ஓடினான்.

ஏன்? எப்படி? எதற்கு? என்ற கேள்விகளுடன் அந்தப் பையை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றார் கவின்.

அவர் கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தார். ஏன் இந்தப் பையைக் காவலர்களிடம் ஒப்படைக்காமல் இருந்தோம் என்று வருந்தினார்.

தொடர்புடைய செய்திகள்

திடீரென்று கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவரது கண்கள் அகல விரிந்தன. காவலர்களாக இருக்கலாமோ என்ற பயத்தில் நடுங்கினார்.

பின்னர் கதவை மெதுவாகத் திறந்தார். அங்கு முரளி நின்று கொண்டிருந்தான். “வணக்கம் நண்பா, என்னுடைய பை உன்னிடம் உள்ளதா, பை எங்கே?” என்று கேட்டான். பைக்குள் என்ன உள்ளது என்று கவின் திருப்பிக் கேட்டார். உடனே, முரளி கவின் மூக்கில் குத்தினான். கவின் தரையில் விழுந்தார்.

அவர் மயக்கம் தெளிந்ததும் காவலர்களை அழைத்து, நடந்த விவரங்களைக் கூறினார்.

காவலர்கள் முரளியைத் தேடிச் சென்றனர்.

முரளி தன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டான். முரளி போதைப்பொருள் புழங்கியது தெரியவந்தது.

முரளியின் தவறு அவன் கண்முன் நிழல் ஆடியது. சிறையில் தன் தவற்றை எண்ணியும் தன் எதிர்காலத்தை தொலைத்ததை எண்ணியும் வருந்தினான் முரளி.

உப்பைத் தின்றால் தாகம் எடுக்கும்! தண்ணீர் குடிக்கத் தோன்றும். அதேபோல் தப்பைச் செய்தால் தண்டனை காத்திருக்கும். எல்லாச் செயல்களுக்கும் விளைவுகள் உண்டு.

அபிமன்யு

செயிண்ட் ஹில்டாஸ் உயர்நிலைப் பள்ளி,

உயர்நிலை 2

குறிப்புச் சொற்கள்