தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுவா சூ காங் ரயில் நிலையத்தில் ‘பம்புல்பீ’: மயங்கிய சிங்கப்பூர் ரசிகர்கள்

2 mins read
‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ திரைப்பட, நூல் தொடரின் முக்கியக் கதாபாத்திரமான ‘பம்புல்பீ’’, சிங்கப்பூரில் காட்சியளித்து மக்களைப் பரவசப்படுத்தியது!
003eaf91-4e15-49fe-9b92-a44ad4140878
சகோதரர்கள் குருந்தேவ் விஸ்ருதன் நிர்மல், 13 (வலம்), அத்விகா நிர்மல், 8 (நடுவில்), ‘பம்புல்பீ’யை நேரில் கண்டதும் குதூகலம் அடைந்தனர். - படம்: நிர்மல்

அண்மையில் சுவா சூ காங் பெருவிரைவு ரயில் நிலையத்தின் வெளியே ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ கதாபாத்திரமான ‘பம்புல்பீ’யாக வேடமிட்ட ஒருவர் மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு நன்கொடைத் திரட்டினார்.

மேற்கத்திய நாடுகளில் இதுபோன்று திரைப்படக் கதாபாத்திரங்களாக வேடமிட்டு நிதி திரட்டுவது பல இடங்களிலும் காண்பது வழக்கம். ஆனால், சிங்கப்பூரில் இவ்வாறு காண்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

சில சிறுவர்கள், “யார் இது? புதிதாக, பயங்கரமாக இருக்கிறாரே?” என பெற்றோரின் ஊக்குவிப்புடன் பயந்து பயந்து ‘பம்புல்பீ’யின் அருகே சென்று புகைப்படம் எடுத்தனர்.

சிலர் தைரியமாக, மகிழ்ச்சியுடன் ‘பம்புல்பீ’க்குக் கைகொடுத்தனர்; ‘ஹை-ஃபை’ கொடுத்தனர்.

அதுவும் ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ ரசிகர்களுக்கு சொல்லவே தேவையில்லை! தம் அபிமான கதாபாத்திரத்தை கண்டு துள்ளினர்!

சகோதரர்கள் குருந்தேவ் விஸ்ருதன் நிர்மல், 13, மற்றும் அத்விகா நிர்மல், 8, அவ்வகையில் ‘பம்புல்பீ’யைக் கண்டதும் குதூகலம்தான்! தந்தையிடமிருந்து பெற்ற பணத்தைப் ‘பம்புல்பீ’யின் உண்டியலில் போட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சகோதரர்கள் தந்தையிடமிருந்து பெற்ற பணத்தைப் ‘பம்புல்பீ’யின் உண்டியலில் போட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சகோதரர்கள் தந்தையிடமிருந்து பெற்ற பணத்தைப் ‘பம்புல்பீ’யின் உண்டியலில் போட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: ரவி சிங்காரம்
‘பம்புல்பீ’யை ஓரத்திலிருந்து பார்க்கும்போது முதுகில் வாகன சக்கரங்கள் தெரிகின்றன.
‘பம்புல்பீ’யை ஓரத்திலிருந்து பார்க்கும்போது முதுகில் வாகன சக்கரங்கள் தெரிகின்றன. - படம்: ரவி சிங்காரம்

‘நெட்ஃப்லிக்ஸ்’சில் அனைத்து ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ திரைப்படங்களையும் கண்டுள்ள சகோதரர்கள், ஒரு முறை திரையரங்கிலும் திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள். திரைப்படக் கதாபாத்திரத்தை நேரில் கண்டது அவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

“படத்தில் பம்புல்பீயாக நடித்தவர்தான் இங்கு வந்திருக்கிறாரா?” என அவர்கள் கேட்ட கேள்விக்கு, அவர்களது தந்தை நிர்மல், “இல்லை பிள்ளைகளே! திரைப்படத்தில் வந்த பம்புல்பீ, கணினி வடிவமைப்புமூலம் செய்யப்பட்டது!” என்றார்.

நான் எதிர்காலத்தில் ‘வண்டர் வுமேன்’ ஆகி, சிரமப்படுவோருக்கு உதவ விரும்புகிறேன்.
அத்விகா நிர்மல், 8.
புத்தாக்கமான ‘சூப்பர்ஹீரோ’ கதாபாத்திரங்களை நான் உருவாகக்க விரும்புகிறேன். எனக்கு ‘எஸ்எம்ஆர்டி’ பேருந்து, ரயில்கள் பிடிக்கும். அவற்றை இணைத்து சிங்கப்பூர் ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ ஆக்க விரும்புகிறேன்.
குருந்தேவ் விஸ்ருதன் நிர்மல், 13.

யார் இந்த ‘பம்புல்பீ’?

சிங்கப்பூர் ‘யுனிவர்சல் ஸ்டூடியோஸ்’ஸிலும் ‘பம்புல்பீ’யைக் காணலாம்!
சிங்கப்பூர் ‘யுனிவர்சல் ஸ்டூடியோஸ்’ஸிலும் ‘பம்புல்பீ’யைக் காணலாம்! - படம்: ஸ்கிரிப்லிங்கீக்ஸ்/விகிமீடியா

‘பம்புல்பீ’ என்பது ‘ஆட்டோபாட்ஸ்’ எனும் வேற்று கிரகவாசி இயந்திர உயிரினங்களில் ஒன்று.

இயந்திரமனிதனாக மாறக்கூடிய (கருப்பு வரிகள் கொண்ட​) மஞ்சள் உந்துவண்டிதான் ‘பம்புல்பீ’. 2018ல் வெளியான ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ தொடரின் ஆறாவது திரைப்படம், ‘பம்புல்பீ’யை மையப்படுத்துகிறது.

இயந்திரமனிதனாக மாறக்கூடிய (கருப்பு வரிகள் கொண்ட​) மஞ்சள் உந்துவண்டிதான் ‘பம்புல்பீ’.
இயந்திரமனிதனாக மாறக்கூடிய (கருப்பு வரிகள் கொண்ட​) மஞ்சள் உந்துவண்டிதான் ‘பம்புல்பீ’. - படம்: வில்லியம் சிஸ்டி/விகிமீடியா

மற்ற இயந்திரங்களின் முன்னிலையில் தன் திறன்களைக் காண்பிக்க ‘பம்புல்பீ’ விடாமுயற்சி செய்துவருகிறது. அதனால், ஆபத்திலிருந்து பலமுறை தப்பிக்கவேண்டியிருக்கிறது.

முதல் ‘பம்புல்பீ’ கேலிச்சித்திரத் தொடரின் அனைத்துப் பாகங்களிலும் வந்த இரு கதாபாத்திரங்களில் ஒன்று ‘பம்புல்பீ’. மற்றொன்று அதன் தலைவர் ‘ஆப்டிமஸ் பிரைம்’. தொடக்கத்தில் சிறிய உருவமாக இருந்த ‘பம்புல்பீ’, பின்பு ‘தங்கவண்டு’ என்ற பலசாலியாக கேலிச்சித்திரங்களில் மாற்றப்பட்டது.

‘பாட்கான் மாநாடு 2023’ல் பம்புல்பீ, ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ புகழ் மண்டபத்தின் முதல் ஐந்து இயந்திரங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது.

திரைப்படத்தில் ‘பம்புல்பீ’ வடிவமைக்கப்பட்டது எப்படி?

திரைப்படத்தில் வரும் ‘பம்புல்பீ’ முற்றிலும் கணினியிலேயே வடிவமைக்கப்பட்டது. ‘பம்புல்பீ’க்கு 10,000க்கும் மேற்பட்ட கணினியில் வடிவமைக்கப்பட்ட உடற்பாகங்கள் உள்ளன. 

படப்பிடிப்பின்போது நடிகர்களுக்கு உதவ ‘பம்புல்பீ’யின் முழு உருவமும், முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) முறையில் தயாரிக்கப்பட்டது. ‘பம்புல்பீ’யின் சிறு உருவப்பொம்மைகளை இதே முறையிலும் https://www.thingiverse.com/ போன்ற இணையத்தளங்கள்வழி அச்சிடலாம்.

‘பம்புல்பீ’யின் சிறு உருவப்பொம்மைகளை முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) முறையில் தயாரிக்கலாம்.
‘பம்புல்பீ’யின் சிறு உருவப்பொம்மைகளை முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) முறையில் தயாரிக்கலாம். - படம்: ஸ்ட்ரோங்ஹீரோ/திங்கிவர்ஸ்
குறிப்புச் சொற்கள்