பள்ளி விடுமுறை முடிந்து இரண்டாவது பருவத்தை சுவாரசியமான சாகசங்களுடன் ஆரம்பியுங்கள்!
கதை சொல்லும் பிரிவும் மேடை நாடகமும் ‘பள்ளியின் புதிய பருவம்’ என்ற கருப்பொருளுடன் ஜூன் 30, காலை 11 முதல் மாலை 3 வரை, ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
மேலும், புதிய பள்ளி காலத்தை தொடங்க ஒரு சொந்த ‘பேட்ஜ்’ அணிந்துகொள்ளும் வகையிலான அங்கீகார வில்லையை உருவாக்க ஓர் அரிய வாய்ப்பு!
ஓர் அருங்காட்சியக நுழைவுச்சீட்டை வாங்கும்போது 5 வெள்ளி மதிப்புள்ள ஒரு மர்மச் சீட்டை பெறலாம்!
முதல் 50 பார்வையாளர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பல சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் உள்ள நடவடிக்கைகள்.
1. படைப்பாற்றலுடன் இருங்கள்! உங்கள் சொந்த பேட்ஜை உருவாக்குங்கள்.
நேரம்: காலை 11 மணி-பிற்பகல் 3 மணி, வயது : 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
நீங்கள் பெருமைப்படும் ஒன்றை கொண்டாடும் விதமாக வண்ணமயமான பொருள்களுடன் பேட்ஜை உருவாக்குங்கள். உங்கள் சாதனை பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும்- ‘பாஸ்தாவுடன்’ உங்களுடைய படைப்பாற்றலை மேம்படுத்துங்கள்!
2. மேடை நாடக நடிப்பு
நேரம்:காலை 11.30 மற்றும் மாலை 2.30, வயது: 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
‘தி செகண்ட் பிரேக்ஃபாஸ்ட்’ நிறுவனத்தால் படைக்கப்படும் ஒரு சுவாரசியமான, ஊக்கமூட்டும் நாடக நிகழ்ச்சி.
3.காட்சிக்கூடத்தில் கதை நேரம்!
நேரம்: பகல் 1.30, வயது: 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
கதைகள் மன்னர் ராஜா சூரன் எவ்வாறு உலகை வெல்ல முயற்சிக்கிறார் என்றும் அதில் அவர் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாக கொண்டு சுவாரசியமாக இருக்கும்.

