1. மெல்ல மெல்ல செல்லும். ஆனால், கீழே வராது. அது என்ன?
2. இது உங்களுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், உங்களைத் தவிர மற்றவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். அது என்ன?
3. உயரமான இடத்தில் இருந்து தூக்கி எறிந்தாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. ஆனால், தண்ணீரில் போட்டால் செத்துவிடும். அது என்ன?
4. இளமையில் இது நீளமாக இருக்கும். ஆனால், வயதானால் சுருங்கிவிடும். அது என்ன?
5. ராணியின் அம்மாவிற்கு 4 குழந்தைகள். அவர்கள் தருண், வருண், அருண், நான்காமவர் யார்?
6. எத்தனை முறை சுற்றினாலும் தலை சுற்றாது. அது என்ன?
7. உடம்பு இல்லாத எனக்கு தலையுடன், பூ உண்டு. நான் யார்?
8. கண்ணில்லாத என்னால் அழமுடியும். நான் அழுவதை உங்களால் பார்க்க முடியும்.
தொடர்புடைய செய்திகள்
நான் யார்?
9. மழையில் வளர்ந்து வெயிலில் கிடக்கிறான். அவன் யார்?
10. எல்லோருக்கும் கிடைக்காத மதி, ஆனால் எல்லோரும் விரும்பும் மதி. அது என்ன மதி?
1. வயது.
2. உங்கள் பெயர்.
3. காகிதம்.
4. மெழுகுவர்த்தி
5. ராணி
6. மின்விசிறி.
7. நாணயம்
8. மேகம்.
9. காளான்.
10. நிம்மதி.

