சாங்கி விமான நிலையத்தின் விளையாட்டு மைதானங்கள்

சாங்கி விமான நிலையத்தின் விளையாட்டு மைதானங்கள்

2 mins read
4706b66b-11fe-477b-a1bd-08bd5f9431d3
சாங்கி விமான நிலையம் - News article

ஆசியாவிலேயே சிங்கப்பூர் விமான நிலையம்தான் மிகவும் சீரான மற்றும் உன்னதமான ஒன்று என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சிங்கப்பூரில் இருக்கும் நான்கு முனையங்களிலும் விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்குவதும் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்படுவதும் முக்கிய காரணம் ஆகும்.

பொதுமக்கள் விமான நிலையத்திற்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக போவது இல்லாமல் பலரும் குடும்பத்துடன் உல்லாசமாக செல்லும் இடமாகவும் இருக்கிறது.

பலதரப்பட்ட கடைகள், உணவுக் கடைகள் இருப்பதோடு சிறுவர்கள் மகிழ்ந்து விளையாட பல விளையாடும் இடங்களும் நான்கு முனையங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

சாங்கி விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் சான்றியோ ஹலோ கிட்டி விளையாட்டு மைதானம் கட்டப்பட்டிருந்தது. அது இடிக்கப்பட்டாலும் இன்னும் சிறுவர்களின் மத்தியிலும் பெரியவர்கள் மத்தியிலும் பெரிதளவில் பேசப்படும் ஒரு விளையாட்டு மைதானமாக இருந்து வருகிறது.

தற்பொழுது முனையம் மூன்றில் மட்டுமல்லாமல் மற்ற முனையங்களிலும் சிறுவர்கள் விளையாடும் இடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

முனையம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இரண்டு முதல் ஆறு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்காக விளையாட்டு மைதானங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் சிறிய விளையாட்டுப் பாலங்கள், சறுக்கு மரங்கள் போன்ற அம்சங்கள் உள்ளன. 

அதுமட்டுமல்லாமல் முனையம் மூன்றில் பாறை ஏறுதலும் இருக்கிறது. சிறுவர்கள் இந்தப் பாறையில் ஏறி மகிழலாம்.

மேலும் முனையம் மூன்றில் 6 மீட்டர் அகலமும் 3.5 மீட்டர் உயரமும் கொண்ட திரை அரங்கம் இருக்கிறது. அங்கு படங்கள் காட்டப்படும். வசதியாக படிகளில் அமர்ந்து பெரிய திரையில் படங்களைப் பார்த்து மகிழலாம்.

இறுதியாக குடும்ப உறுப்பினர்களுடன் விமானங்கள் தரையிறங்குவதையும் வானில் பறப்பதையும் பார்வையிடும் இடத்தில் அமர்ந்து கண்டுகளிக்கலாம்.

குடும்பமாகச் சென்று குதூகலிக்க சாங்கி விமான நிலையங்களுக்குச் செல்லுங்கள்.

கிருஸ்மிதா ஷிவ் ராம்

குறிப்புச் சொற்கள்