ஜூன் 14ஆம் தேதி சிங்கப்பூர் கப்பலுடன் நெதர்லாந்து கப்பல் மோதியதால் 400 டன்னிற்கும் மேற்பட்ட எண்ணெய் கடலில் கலந்தது.
அதனால் சிங்கப்பூரின் பல கடற்கரைகளில் எண்ணெய்க் கறை படிந்தது.
கந்தகம் குறைவாக உள்ள எண்ணெய் கடுமையான சுகாதார பிரச்சினைகளைத் தரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்ததால் கடல் நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தடை விதித்திருந்தும் கடல் நீர் பார்க்க சுத்தமாக இருப்பதாக நினைத்து சிலர் ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் நீர் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அதனைப் பார்த்த சுற்றுக் காவல் அதிகாரிகள் எண்ணெய் கலந்த நீரைச் சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல், தலைவலி, தோல் எரிச்சல், கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதை கூறி அவர்களை கடற்கரையில் இருந்து வெளியேற்றினர்.
ஆனால், சாங்கி கடற்கரை எண்ணெய்க் கசிவுச் சம்பவத்தால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில்கொண்டு சாங்கி கடற்கரையில் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
சென்ற வாரம் “சாங்கி கடற்கரை நீரின் தரம் தற்பொழுது நன்றாக இருப்பதால் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை மீட்டுக்கொள்கிறோம்,” என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மற்ற கடற்கரைகளில் உள்ள தடைகள் இன்னும் மீட்டுக்கொள்ளப்படாததால் பலர் சாங்கி கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.