கடற்கரையில் அமர்ந்து மேகத்தைப் பார்த்தேன். மேகம் எந்த வடிவத்தில் வரும், தெரியவில்லை! ஒரு குதிரை வடிவத்தில் இருக்கலாம் ஒரு நாய் வடிவத்தில் இருக்கலாம் பார்ப்பதற்கு, என் வடிவத்திலும் இருக்கலாம் அடுத்த தடவை யாராவது எனக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னால் அவர்களிடம் கேளுங்கள், மேகம் எந்த வடிவத்தில் வரும் என்று! கவிஞர் நிதின் சீனிவாசன் , உயர்நிலை 2 விரைவுநிலை, கான் எங் செங் பள்ளி
மேகம்
நீல வானில் அசையும் சூரியனிலிருந்து நம்மை நிழலாக்கும் மேகம். அது, கோபப்பட்டால் கர்ஜிக்கும் வருத்தப்பட்டால் அழும் மேகத்தைக் கோபிப்பது நியாயமா? கவிஞர் அமலேஷ் ஸ்கந்தகுமார், உயர்நிலை 2 விரைவுநிலை, கான் எங் செங் பள்ளி
மேகம்
அழகான வானம் மென்மையான மேகம் மழைநீரும் காற்றும் எழுப்பும் இசை அம்மா குழந்தைக்குப் பாடும் தாலாட்டு போன்றது. கவிஞர் அருணேஷ் ஸ்கந்தகுமார், உயர்நிலை 2 விரைவுநிலை, கான் எங் செங் பள்ளி
மேகம்
மேகமே மேகமே உனக்கு என்ன அவசரம் ஏன் அவசரமாக என்னைக் கடந்துபோகிறாய்? தினமும் சூரியன் மலரும்போது உன்னைப்பார்த்து என் கண்கள் மலரும் இடியும் மின்னலையும் தாங்கிக் கொள்கிறாய் நீ எவ்வளவு பலசாலி.. சில நேரங்களில் இடியாய் வந்து என்னை அஞ்ச வைப்பாய்.. சோகமாக இருக்கும்போது நீயும் வந்து அழுவாய்! கவிஞர் ஆஷிக், உயர்நிலை 2 வழக்கநிலை, கான் எங் செங் பள்ளி
மேகம்
மேகம் நமக்கு மழை அனுப்பும் குளிர் அனுப்பும் பஞ்சுமிட்டாய் போல் மிதக்கும் விவசாயத்திற்கு நீர் கொடுக்கும் சூரியனை அழகாக்கும் மேகம் அழகான நீலநிற மேகம் கவிதாயினி மு. பஷாரா, உயர்நிலை 2 விரைவுநிலை, கான் எங் செங் பள்ளி

