சிங்கப்பூரில் உள்ள சுவாரசியமான நீர் விளையாட்டு மைதானங்கள்

சிங்கப்பூரில் உள்ள சுவாரசியமான நீர் விளையாட்டு மைதானங்கள்

2 mins read
ceae1254-74d8-40d3-844e-31b5fc4c4b7c
நீர் விளையாட்டு மைதானம்.  - Monolisa

சுட்டெரிக்கும் இந்த வெயிலில் குழந்தைகளுடன் சிங்கப்பூரில் இருக்கும் சுவாரசியமான நீர் விளையாட்டு மைதானங்களைச் சுற்றிப் பார்க்க ஓர் அற்புத வாய்ப்பு.

சிங்கப்பூரில், குழந்தைகளுக்காக பலதரப்பட்ட நீர் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பல விளையாடுமிடங்கள் அனுமதி இலவசம்.

இலவச அனுமதி உள்ள விளையாடுமிடங்கள் பல அடுக்குமாடி கட்டடங்களின் அருகில் இருக்கும் பூங்காக்களிலும் கட்டப்பட்டுள்ளன.

புவாங்கோக் சதுரங்க நீர் பூங்கா, இந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. 6 முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சென்று விளையாடும் மைதானம் ஆகும்.

மேலும் இதுபோன்ற இடங்களில் விளையாட்டு நீரூற்றுகள் இருப்பதுடன் விளையாடி முடித்த பிறகு குளிப்பதற்கு வசதியான கழிவறைகளும் அருகில் உள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இலவசமாகத் திறக்கப்பட்டு இருக்கும் நீர் விளையாட்டு மைதானம் ஆகும்.

ஒயாசிஸ் நீர் பூங்கா @ நீ சூன் ஈஸ்ட், லேக்சைட் பூங்கா ஜூரோங், பீஷான்-அங் மோ கியோ பூங்கா போன்ற இடங்களிலும் இவை கட்டப்பட்டுள்ளன. 

அடுத்ததாக நெக்ஸ் பேரங்காடியில் கிட்ஸ் ப்ளே@ ஸ்கை கார்டன் கட்டப்பட்டுள்ளது. மேம்பாடுகள் செய்யப்பட்டு இது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கே, குழந்தைகள் விளையாடுவதற்கு நீர் சறுக்கு மரங்கள் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை விளையாட அனுமதி இலவசம்.

அடுத்ததாக, வைல்ட் வைலட் வெட். இது சிங்கப்பூரின் ஆகப்பெரிய நீர் விளையாட்டு மைதானம். இங்கே பலதரப்பட்ட விளையாட்டு அம்சங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. லேசி ரிவரில் பெற்றோர்களும் குழந்தைகளும் இணைந்து மகிழ்ச்சியாக பொழுதை களிக்கலாம். இது குழந்தைகளை ஈர்ப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குக் கட்டணம் 21 வெள்ளி, பெரியவர்களுக்குக் கட்டம் 29 வெள்ளி. 3 வயதிற்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்