உலகத்தையே விளையாட்டுத் திருவிழாவால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது ஒலிம்பிக் போட்டியால் மட்டுமே முடியும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற இருக்கிறது.
1900, 1924ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரிசில் மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
இன்னும் நான்கு நாட்களில் அதாவது இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். இப்போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.