பதக்கங்கள்:
1904ஆம் ஆண்டிலிருந்துதான் போட்டியில் வெல்பவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் அளிக்கும் வழக்கம் தொடங்கியது.
1912ஆம் ஆண்டு வரை போட்டியில் வென்றவர்களுக்கு சுத்த தங்கத்தால் ஆன பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன் பின் தங்க முலாம்தான்!
மேலும் பதக்கம் வழங்குவதில் முக்கிய நிகழ்வாக தங்கம் வென்ற நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். இது ஒரு நெகிழ்ச்சியான தருணமாகப் பார்க்கப்படுகிறது.
தற்பொழுது நடைபெற உள்ள 33வது ஒலிம்பிக்கிற்காக மொத்தம் 5,084 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 2,600 பதக்கங்கள் ஒலிம்பிக்கிலும், மீதமுள்ள பதக்கங்கள் பாரா ஒலிம்பிக்கிலும் வழங்கப்பட உள்ளன.
இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால் பதக்கத்தின் பின்பக்கத்தில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்தைப் புதுப்பித்தபோது அதில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பு உலோகங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு அவை தற்போது பாலிஷ் செய்யப்பட்டு பதக்கத்தின் பின்பக்கத்தில் பதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஒவ்வொரு பதக்கத்திலும் ஈபிள் கோபுரத்தின் 18 கிராம் இரும்பு அடங்கியிருக்கும்.
தங்கமோ வெள்ளியோ வெண்கலமோ எதுவாக இருந்தாலும் அவற்றில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த அரிய பதக்கத்தை வெல்ல எத்தனை வீரர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.