தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன நல்லிணக்க நாள் சிறப்பு நிகழ்ச்சி

2 mins read
8b476ff5-ddda-469c-a38d-80cd2807e32f
N2, K1, K2 மாணவர்களுக்கு இன நல்லிணக்கக் கருவில் மாறுவேடப் போட்டி நடைபெற்றது. - படம்: மணிகண்டன் சண்முகம்
multi-img1 of 4

சீனர், மலாய், இந்தியர், யுரேசியர், ஐரோப்பியர் என பலவிதமான இனங்களும் சங்கமிக்கும் சிங்கப்பூரில் ஒற்றுமையும் அமைதியும் நிலவ இன நல்லிணக்கம் இன்றியமையாத ஒன்று.

இதை சிறுவர்களிடத்தில் வலியுறுத்தும் நோக்கில் இந்தியன்.எஸ்ஜி நிறுவனம், சேக் சலாம் இந்தியா மாபெரும் கண்காட்சியின் ஆதரவோடு சனிக்கிழமை ஜூலை 13ஆம் தேதியன்று காலை 11 முதல் பிற்பகல் 2.30 மணி வரை இன நல்லிணக்க நாள் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்தது.

N2, K1, K2 மாணவர்களுக்கு மாறுவேடப் போட்டியும் K2, P1, P2 மாணவர்களுக்குத் திறன் காட்டுதல் போட்டியும் நடைபெற்றன.

மாறுவேடப் போட்டி இன நல்லிணக்கம் என்ற கருவில் நடைபெற்றது. N2, K1 ஒரு பிரிவாகவும் K2 மற்றொரு பிரிவாகவும் வெவ்வேறு இனத்தாரின் வண்ணமயமான உடைகளில் காட்சியளித்தனர்.

திறன் காட்டுதல் போட்டியில் பாடல், கதைசொல்லுதல், நடனம் என மூன்று பிரிவுகள் இடம்பெற்றன. K2 பாலர்பள்ளி மாணவர்கள் தொடக்கநிலை மாணவர்களுக்கு ஈடுகொடுத்துப் போட்டியிட்டனர்.

“நம்மைவிட ஒரு நிலை மேலானோருடன் போட்டியிட்டால்தான் நம் தரம் மேம்படும்.

“இம்முறை N2 மழலையர்களுக்கும் பங்குபெற வாய்ப்பளித்தோம். இளங்கன்று பயம் அறியாது. சிறுவயதிலேயே மாணவர்களுக்கு மேடையில் பார்வையாளர்களின் முன்னிலையில் தம் திறன்களைப் படைக்கும் அனுபவம் வழங்கினால், அவர்களுக்கு மேடை பரீட்சயமாகிவிடும்.” என்றார் போட்டி ஏற்பாட்டாளர் கல்யாண்.

ஐந்து பிரிவுகளில் மொத்தம் 15 பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் வீட்டிற்குத் திரும்பிய அனைத்துச் சிறுவர்களும் ஒரு பதக்கத்தோடு திரும்பினர்.

“இவ்வளவு சிறுவயதுச் சிறுவர்களை கலந்துகொள்ளச் செய்வது எளிதல்ல. அதனால், அனைவருக்கும் பதக்கம் வழங்கி பெற்றோரையும் பிள்ளைகளையும் ஊக்குவிக்கிறோம். பெற்றோர் நினைத்தால்தான் அடுத்த தலைமுறைக்குத் தமிழ்மொழியைக் கொண்டுசெல்லமுடியும்.” என அவர் கூறினார்.

விஜய் டிவியில் மகாபாரதம் பார்த்தபோது கர்ணன் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தார். அவர் அனைவருக்கும் வாரி வழங்குபவர்; நல்லவராக இருந்தாலும் நிறைய கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டார்.
கர்ணனாக வேடமிட்டு இரண்டாம் பரிசை வென்ற ராஜகுமார் விக்ரம், 6.
என் அம்மாவிடம் ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்தையும் கற்றுக்கொண்டு பாடினேன்.
‘ஓடி விளையாடு பாப்பா’ பாடலைப் பாடி முதல் பரிசை வென்ற ராஜகுமார் முகுந்தன், 8.
ராஜகுமார் விக்ரம், 6 (இடம்), ராஜகுமார் முகுந்தன், 8 (வலம்) தம் பெற்றோருடன்.
ராஜகுமார் விக்ரம், 6 (இடம்), ராஜகுமார் முகுந்தன், 8 (வலம்) தம் பெற்றோருடன். - படம்: ராஜகுமார்
நான் சிங்கப்பூரிலுள்ள மூன்று இனத்தாரையும் பிரதிபலிக்கும் வகையில் ஆடையணிந்திருந்தேன். விறகு வெட்டியின் கோடாரிக் கதையைக் கூறி நேர்மையை வலியுறுத்தினேன்.
மாறுவேடப் போட்டி, கதைசொல்லும் போட்டிகளில் முதல் பரிசு வென்ற அநபாயன் ஜெயகாந், 6.
கதைசொல்லும் போட்டிகளில் முதல் பரிசு வென்ற அநபாயன் ஜெயகாந், 6.
கதைசொல்லும் போட்டிகளில் முதல் பரிசு வென்ற அநபாயன் ஜெயகாந், 6. - படம்: ஜெயகாந்
நான் “சிங்கமும் எலியும்” எனும் நீதிக்கதையை சொன்னேன். அன்பு, பரிவு, ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினேன்
கதைசொல்லுதலில் இரண்டாம் பரிசை வென்ற வினிஷா வேல்முருகன், 6.
கதைசொல்லுதலில் இரண்டாம் பரிசை வென்ற வினிஷா வேல்முருகன், 6.
கதைசொல்லுதலில் இரண்டாம் பரிசை வென்ற வினிஷா வேல்முருகன், 6. - படம்: வேல்முருகன்
அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம் வழங்கியது மிகவும் பாராட்டத்தக்கது. எங்கள் பிள்ளை மேடையேறியதைக் காணும்போது பெருமைப்பட்டோம்.
நடனத்தில் முதல் பரிசு, மாறுவேடத்தில் மூன்றாம் பரிசு வென்ற 5 வயது அனிகா ராஜேஷின் தாயார் ஜெயஸ்ரீ ராஜேஷ்.
நடனத்தில் முதல் பரிசு, மாறுவேடத்தில் கேரளத்தின் உடையணிந்து மூன்றாம் பரிசு வென்ற அனிகா ராஜேஷ், 5.
நடனத்தில் முதல் பரிசு, மாறுவேடத்தில் கேரளத்தின் உடையணிந்து மூன்றாம் பரிசு வென்ற அனிகா ராஜேஷ், 5. - படம்: ஜெயஸ்ரீ ராஜேஷ்
குறிப்புச் சொற்கள்