தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடியிருப்பு வட்டாரங்களில் கொண்டாட்டங்கள்

1 mins read
4068c408-3049-4f5f-845c-16369c4de08d
குடியிருப்பு வட்டாரங்களில் கொண்டாட்டங்கள். - படம்: ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ்

‘தேசத்தோடு ஒத்து வாழ்’ என்ற ஆத்திசூடிக்கு ஏற்ப நாம் நம் நாட்டில் வாழும் பல இன மக்களோடு நல்லிணக்கத்துடன் பழக வேண்டும்.

ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, மக்கள் கழகத்துடன் இணைந்து சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்பு வட்டாரங்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்று படித்துத் தெரிந்துகொண்டேன்.

வாணவேடிக்கைகள், மேடை நிகழ்ச்சிகள், ராணுவம், காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினரின் கண்காட்சிகள், கேளிக்கைத் திருவிழா, குடும்ப நடவடிக்கைகள் ஆகியவற்றில் கலந்துகொண்டு நாட்டின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு இருக்கிறேன்.

சிங்கப்பூர் மக்கள் அனைவரும் நம் வீட்டினரின் பிறந்தநாளைக் கொண்டுவதுபோல் சிங்கப்பூரின் 59வது பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

ஜெயகுமார் ஜெனிஷா

தொடக்கநிலை 6, செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்