வானத்தைக் கிழித்துச் சென்ற விமானங்கள்

வானத்தைக் கிழித்துச் சென்ற விமானங்கள்

1 mins read
198cc603-cf76-41ad-90de-7f484507f286
வானத்தைக் கிழித்துச் சென்ற விமானங்கள் - படம்: ஊடகம்

பாடாங்கில் நடைபெற்ற தேசிய தின முன்னோட்டக் கொண்டாட்டத்தில் ஜூன் 29ஆம் தேதியன்று நானும் என் பள்ளி நண்பர்களும் எங்கள் ஆசிரியர்களுடன் கலந்துகொண்டோம். இது எனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாகும்.

இராணுவப்படை, ஆகாயப்படையின் சாகசங்கள், வான்குடை வீரர்களின் சாகசங்கள் என்னை உற்சாகப்படுத்தியது. இதில் எனக்குப் பிடித்த அங்கம் ஆகாயப்படையின் சாகசங்கள்தான். பல வகையான போர் விமானங்கள் வானத்தைக் கிழித்துக்கொண்டு பறந்தன. அதோடு, அவை செய்த சாகசங்களைக் கண்டு நான் வியந்து போனேன். அவற்றின் வேகம், வேகத்தால் எழுந்த ஒலி அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தன.

நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, கடினமான சூழ்நிலையைக் கடந்து மீண்டு வரும் வகையில் இவ்வாண்டுத் தேசிய தினக் கருப்பொருள் ‘ஒன்றாய் ஒன்றுபட்ட மக்களாய்’ அமைந்திருந்தது. அவ்வகையில் பல அங்கங்கள் கொண்டாடத்தில் இடம்பெற்றிருந்தன.

நான் என் நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொண்டாடத்தில் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்பமான 59ஆம் பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்!

கிரித்திக் தொடக்கநிலை 5 செயிண்ட் அந்தோணி தொடக்கப்பள்ளி

குறிப்புச் சொற்கள்