சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. சிங்கப்பூர் பெரும் நகரமயம் ஆன நாடாகும். 1966ஆம் ஆண்டு முதல் நாம் தேசிய தினத்தைக் கொண்டாடி வருகிறோம். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தின அணிவகுப்பும் வாணவேடிக்கையும் நடைபெறும். அன்றைய தினம் மறக்கமுடியாத நாளாகும். வாழ்க சிங்கப்பூர்!
பவ்யா, தொடக்கநிலை 5
நம் நாட்டின் தேசியக் கொடி சிவப்பு வெள்ளை நிறத்தில் இருக்கிறது. அதனால், பல சிங்கப்பூரர்கள் தேசிய தினத்தன்று வெள்ளை, சிவப்பு நிறங்களில் உடையணிந்து செல்வார்கள். பல கட்டடங்களில் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறப்பதைக் காணலாம். இது என் நாடு என்று சொல்வதில் நான் பெருமைகொள்கிறேன். வாழ்க! சிங்கப்பூர்! வளர்க! சிங்கப்பூர்!
நிதிஷ், தொடக்கநிலை 3
பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்! நான் உன்னை நினைத்துப் பெருமைகொள்கிறேன். இவ்வளவு காலத்தை நீ ஒரு குறையும் இல்லாமல் கடந்து வந்திருக்கிறாய். எங்களுக்கு ஒரு நல்ல பெயரைக் கொடுத்து இருக்கிறாய். அதற்கு மிகவும் நன்றி சிங்கப்பூர்!
கிரித்திஷ், தொடக்கநிலை 5
மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த தினமான ஆகஸ்ட் 9ஆம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் நாம் தேசிய தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். அன்றைய தினம் நமக்குப் பொது விடுமுறை தினமாகும். அன்று தேசிய தின அணிவகுப்பு, அதையொட்டிய பிரதமரின் உரை, வாண வேடிக்கைகள் ஆகியவை நடைபெறும். 59வது பிறந்தநாளைக் கொண்டாடும் சிங்கப்பூருக்கு என்னுடைய அன்பான தேசிய தின வாழ்த்துகள்!
சாய், தொடக்கநிலை 5
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் கொடிகள் உயரமாகப் பறக்கின்றன! மக்களின் இதயங்கள் வலுவாகத் துடிக்கின்றன! அனைவரும் ஒன்றாக நிற்கிறோம்! ஒற்றுமையாக வாழ்கிறோம்! நாம் பெருமையுடன் கைகோத்து தேசிய தினத்தைக் கொண்டாடுவோம்! கார்திகா தொடக்கநிலை 5
அழகான நாடு! ஆதிக்கமில்லாத நாடு! இனிமையான நாடு! ஈடு இணையில்லா நாடு! உன்னதமான நாடு! ஊக்கமளிக்கும் நாடு! எத்திசையும் போற்றும் நாடு! ஏற்றம் மிகுந்த நாடு! ஐஸ்வர்யம் மிகுந்த நாடு! ஒப்புரவு ஒழுகும் நாடு! ஓய்வின்றி உழைக்கும் நாடு! ஔவியம் பேசா நாடு! இஃது சிங்கப்பூர் என்னும் நமது நாடு!
ஜோசப் மேத்யூஸ்