தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒற்றுமையாக இருந்து நாட்டைப் பாதுகாப்போம்!

2 mins read
02b898fc-3aba-4706-80ed-55343942410c
தேசிய தினக்கொண்டாட்டம். - படம்: ஊடகம்

சிங்கப்பூர் பசுமையான, தூய்மையான நாடு. இந்த ஆண்டு சிங்கப்பூர் 59வது ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. நம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு மேலும் கொண்டு செல்வோம்! பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்!

கிரிதரன் தொடக்கநிலை 3

உலகத்தில் பல நாடுகளில் இனப் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், நம் நாட்டு மக்கள் மதம், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக ஒவ்வோர் ஆண்டும் தேசிய தினத்தைக் கொண்டாடி வருகிறோம். நான் வாழும் சிங்கப்பூருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகள்!

மயூரிகா தொடக்கநிலை 3

தேசிய தினத்திற்கு முதல்நாள் எங்கள் பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். காலையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டுப்பற்று குறித்த பாடலைப் பாடுவோம். 59வது பிறந்தநாள் வாழ்த்துகள் சிங்கப்பூர்!

அஃப்ராஹ் தொடக்கநிலை 3

யாம் அறிந்த மொழிகளிலே சிறந்த மொழி தமிழ்! யாம் அறிந்த நாடுகளில் சிறந்த நாடு சிங்கப்பூர்! வந்தாரை வாழவைக்கும் நாடு! தொழில் நுட்பத்தில் வளர்ந்துவரும் நாடு! இத்தகைய சிறந்த நாட்டைச் செதுக்கிய பெருமை சிங்கப்பூர் தலைவர்களையேச் சேரும். இனி மதங்கள் பார்க்கமாட்டோம்! பாதைகள் மாற மாட்டோம்! நம் நாடு சிறந்து விளங்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்!

அகில் தொடக்கநிலை 3

எங்கள் நாடு சிங்கை நாடு என்றும் வாழ்கவே! பொங்கும் இன்பம் தங்கும் நாடு பொலிந்து வாழ்கவே! கல்வி கேள்வி கனிந்த நாடு சிறந்து வாழ்கவே! நல்ல பண்பு நயந்து கூறும் நாடு வாழ்கவே! இல்லை என்ற சொல்லும் இங்கு என்றும் இல்லையே! எல்லை இல்லா ஏற்றம் பெற்று இன்பம் காணுமே! எங்கள் நாடு சிங்கை நாடு நீடூழி வாழ்கவே!

சூர்யதேவ்

மிகவும் அழகான, பாதுகாப்பான நாடு சிங்கப்பூர்! இங்கு மக்கள் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்! மேலும், என் நாட்டு மக்கள் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள்! இந்த நாட்டில் வாழ்வதில் நான் பெருமைகொள்கிறேன்!.

பாரதி தொடக்கநிலை 3

சிங்கப்பூர் சிங்கப்பூர் சுத்தமான சிங்கப்பூர்! சிங்கப்பூர் சிங்கப்பூர் சுதந்திர சிங்கப்பூர்! சிங்கப்பூர் சிங்கப்பூர் சிங்கம்போல காட்சியளிக்கும் சிங்கப்பூர்!

ஹரிஷ் தொடக்கநிலை 5

குறிப்புச் சொற்கள்