எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்கப்பூருக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. அதைக் கொண்டாட வேண்டாமா?
அதனால்தான், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் சிங்கப்பூர்க் கொடியை உயரப் பறக்கவிட்ட ‘டீம் சிங்கப்பூர்’ அணியினர். அவர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி புதன்கிழமையன்று திறந்தவெளிப் பேருந்தில் சிங்கப்பூரை ஊர்வலம் வந்தனர்.
அவர்களைக் காண சிறுவர்கள், பெரியோர் என வயது வரம்பின்றி 5,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் அலையாடல் (Kitefoiling) போட்டியில் வெண்கலம் வென்ற 17 வயது மேக்சிமிலியன் (மேக்ஸ்) மெய்டர் பேருந்தில் முன்நின்று ஊர்வலத்தை வழிநடத்தினார்.

