“மேக்ஸ்தான் என்னுடைய முன்னுதாரணம். நான் நியூ ஜெர்சியில் படகோட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
மேக்ஸ்மிலியனை நேரில் கண்டு வாழ்த்துத் தெரிவித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது,” என்று விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூரில் இருக்கும் தமது நண்பர்களைக் காணவந்துள்ள விக்ரம் சுல்லிபரம்பில், 18, தெரிவித்தார்.
மேக்ஸ் தன் ஆற்றலை வெளிப்படுத்தியதால் இவ்வளவு பேரும் புகழும் கிடைத்திருக்கிறது. அதனால், நாமும் நம் ஆற்றலை வீணாக்காமல் வெளிப்படுத்தவேண்டும்; விளையாட்டில் ஆர்வம் காட்டவேண்டும் என உணர்ந்தேன் என்றார் சசிகுமார் ஹரி பிரசாந்த், 14. செயின்ட் ஜோசஃப் நிலைய மாணவர்
நமது நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பள்ளிக் காற்பந்துப் போட்டிக்கு ஆதரவளிப்பதற்காக விளையாட்டு மையத்துக்குச் சென்றபோது மேக்ஸ்மிலியனைத் தற்செயலாகப் பார்த்தோம். மேக்ஸ்மிலியனைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்று கூறினார் முருகப்பன் சபரீஷ் சரவணன், 14. செயின்ட் ஜோசஃப் நிலைய மாணவர்
பேருந்து ஊர்வலம் பற்றி எனக்குத் தெரியும்; ஆனால், எங்கிருக்கும் எனத் தெரியவில்லை. தற்செயலாக வந்தபோது மேக்ஸை கண்டதில் மகிழ்ச்சி என்றார் கிருஷ்ணா அர்ஷதா, 14. செயின்ட் ஜோசஃப் நிலைய மாணவர்.