கிராஞ்சி தொடக்கப்பள்ளி தொடக்கநிலை மாணவர்களுக்காக தமிழ் முரசு நாளிதழை ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் பெறுகிறார்கள்.
தமிழ் முரசு நாளிதழுடன் வரும் மாணவர்களுக்கான மாணவர் முரசு நாளிதழைப் படித்து அதிலுள்ள பல நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் மாணவர் முரசில் வரும் செய்திகளைப் படித்து அவற்றைக் கொண்டு சில மொழி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மாணவர் முரசில் அண்மையில் வெளியான தமிழ் மாதங்கள் பற்றி வெளியான பாடலைப் பயன்படுத்தி தொடக்கநிலை மாணவர்கள் தமிழ் மாதங்களைக் கற்றுக்கொண்டார்கள். அத்துடன் இனிமையான பாடலைப் பாடி மகிழ்ந்தார்கள்.
தொடக்கிநிலை 4 மாணவர்கள் ஜூலை ஒன்றாம் தேதி பக்கம் நான்கில் வெளியான கடல் ஆமை கற்றுத் தந்த பாடம் எனும் கதைப் பகுதியைப் படித்தார்கள்.
பிறகு அவர்கள் பிக்கொலாஜ் (PicCollage) செயலியைப் பயன்படுத்தி கடலைப் பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மின்-சுவரொட்டிகளைத் தயாரித்தார்கள்.
தொடக்கநிலை 5 மாணவர்கள் அதே நாளில் வெளியான பக்கம் 11ல் வந்த விடுகதைகளைக் கொண்டு தாங்களும் வகுப்பில் ஒரு விளையாட்டு சுவரொட்டியை உருவாக்கினார்கள். பிறகு தொடக்கநிலை 6 மாணவர்களுக்கு ஒரு விடுகதைப் புதிர் போட்டியை நடத்தி விளையாடினார்கள்.
தொடக்கநிலை 6 மாணவர்கள் ‘கடலைக் கறுப்பாக்கிய எண்ணெய்க் கசிவு’ பற்றிய ஒரு பகுதியைப் படித்து கடலையும் சிங்கைக் கடற்கரைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு மன வரைபடத்தை வரைந்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள்.
தொடர்புடைய செய்திகள்
இதுபோல் ஒவ்வொரு வாரமும் மாணவர் முரசு நாளிதழைப் பயன்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.