புத்தாக்க வழிகளில் கற்பித்தல்

1 mins read
59967dda-d4d4-4a36-8e55-05c562ac504a
ஆசிரியர் திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன். - படம்: பே கார்த்திகேயன்

பொம்மலாட்ட கலை மூலம் மாணவர்களின் தமிழ்மொழிப் புழக்கத்தைத் தூண்டுகிறார் ஆசிரியர் திருவாட்டி ஜெயசுதா விஜய குமாரன், 48.

செங்காங் தொடக்கப்பள்ளியில் மலாய் மற்றும் தமிழ் மொழிப் பாடங்களுக்கு தலைவராக இருக்கும் அவர் 18 ஆண்டுகளாக இத்துறையில் இருந்து வருகிறார்.

தமது உயர் தாய்மொழிப் பாட மாணவர்கள் மொழியில் மேலும் சிறப்பாக விளங்க வேண்டும் என்பதற்காக திருவாட்டி ஜெயசுதா, அவர்களுக்கு கவிதை எழுதுவது, நாடகம், விவாதத் திறன்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.

மாணவர்களின் சொல்லகராதி திறனை வளர்க்க திருவாட்டி ஜெயசுதா செங்காங் தொடக்கப்பள்ளியில் ‘அடி அடி’ எனும் விளையாட்டை உருவாக்க பங்களித்துள்ளார். வகுப்பறைக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் கலாசார எழுத்தறிவை வளர்க்க பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார் திருவாட்டி ஜெயசுதா. அவருக்கு சென்றாண்டு கல்வி அமைச்சின் பிளாட்டினம் பிரிவில் உன்னதநிலை சேவை விருதும் கிடைத்தது.

“சிறு வயதிலிருந்தே நான் தமிழ் ஆசிரியராக வேண்டுமென்று விரும்பினேன். அது போல எனது மாணவர்களில் சிலர் இப்போது தமிழ் ஆசிரியர்களாக உள்ளனர். மாணவர்கள் தொடக்கநிலையிலேயே தமிழ்மொழி மீது ஆசைப் பட வேண்டும். நான் இந்த நிலையை அடைவதற்கு எனது ஆசிரியர்கள் பெரிய பங்காற்றியுள்ளனர்,” என்று விருது கிடைத்த மகிழ்ச்சியில் கூறினார் திருவாட்டி ஜெயசுதா.

குறிப்புச் சொற்கள்