நம் நாட்டின் 60ஆம் பிறந்த நாளை நினைவுகூரும் அந்தச் சிறப்புநாளில், நான் ஒரு புதிய, மறக்க முடியாத அனுபவத்தை பெற்றேன்.
அந்த நாளின் ஒலி, ஒளிக்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், வீரர்களின் அர்ப்பணிப்பு இவை என் மனதைக் கவர்ந்தன.
தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த தேசிய தின அணிவகுப்பை இம்முறை நான் நேரில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
முக்கியமாக, கடற்படை வீரர்கள் 6,000 அடி உயரத்திலிருந்து வானில் தண்ணீர் திரையை உருவாக்கியதை நேரில் காண நேர்ந்தது மிகுந்த அதிசயத்தையும் வியப்பையும் அளித்தது.
அதைவிட மிகுந்த ரசனையை ஏற்படுத்தியது ரெட் லைன்ஸ் குழுவினர் 10,000 அடி உயரத்திலிருந்து பாடாங் பகுதியில் வானத்தில் பறந்து வண்ணங்களால் வானத்தை அலங்கரித்தது. அது ஒரு கலைநயமும், வீரமும் கலந்த கண்ணைப் பறிக்கும் வகையில் அமைந்திருந்தது.
இந்த தேசிய தின அணிவகுப்பு என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு தருணமாகவே அமைந்தது.
மெரினா பே முழுதும் ஒளி புகட்டும் கட்டடங்கள், புஷ்பக்காட்சிகள், ஒளி‑ஒலி அமைப்புகள் மூலம் தீவிரமான குழும அனுபவத்தை வழங்கியது.
இதை நேரில் பார்த்தது என்னுடைய நாட்டுக்கான அன்பையும், அறியாமலே என் உள்ளத்தில் பதிந்த தேசிய உணர்வையும் மேலும் வலுப்படுத்துகின்றது.
தொடர்புடைய செய்திகள்
இந்த அனுபவம் எனக்குப் புதியதாயிருந்தாலும், இது இனிமையான தருணமென நான் கருதுகிறேன்.
- ரக்ஷணாஸ்ரீ, தொடக்கநிலை 5, ஃபுச்சூன் தொடக்கப்பள்ளி
சிங்கப்பூரின் இந்த 60 ஆம் ஆண்டு தேசிய தின நிகழ்ச்சிகளை நான் என் பள்ளி நண்பர்களுடன் ஒருமுறையும் என் குடும்பத்தோடு ஒரு முறையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
வண்ணங்கள் நிறைந்த வாண வேடிக்கைகள், பட்டாசுகள், போர் விமான சாகசங்கள் ஆகிய அனைத்தும் கண்ணை கவரும் வண்ணம் இருந்தன.
அதுவே தேசிய சேவையின் போது, ஒரு போர் விமானியாக பயிற்சி பெற வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்துவிட்டது. சிங்கப்பூருக்கு என் மனமார்ந்த 60ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள்.
By, கோவிக், தொடக்கநிலை 5, ஃபுச்சூன் தொடக்கப்பள்ளி