நேர்மையின் வெற்றி

நேர்மையின் வெற்றி

2 mins read
ec73ca68-dd43-434c-8e3d-736fe36f466c
படம்: - செயற்கை நுண்ணறிவு

ஈசூன் வட்டாரத்தில் அருள் என்ற ஒரு மாணவன் இருந்தான். அவன் மிகவும் சுறுசுறுப்பானவன்.

ஆனால், சில நேரங்களில் அவசரமாக முடிவெடுப்பான். அவனுக்கு இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களின் பெயர் குமார், லதா.

ஒரு நாள் பள்ளியில் தமிழ்த் தேர்வு நடந்தது. ஆசிரியர் எல்லோருக்கும் கேள்வித்தாள்களைக் கொடுத்து எழுதச் சொன்னார்.

அருள் நன்றாகப் படித்திருந்தாலும், கடினமான கேள்வி ஒன்றால் அவன் சற்று குழப்பமடைந்தான்.

அதைப் பார்த்த அருளின் அருகில் இருந்த குமார், மெதுவாக அவனிடம் தன்னுடைய விடைத்தாளைப் பார்த்து எழுதச் சொன்னான்.

அருளுக்கு அது தவறு என்று தெரிந்தது. இருப்பினும், அவன் ஒரு நிமிடம் தயங்கினான்.

அதை கண்ணுற்ற லதா அவனைப் பார்த்து மெதுவாக,“நீ உன் முயற்சியால் எழுத வேண்டும். தவறானாலும் பரவாயில்லை, ” எனச் சொன்னாள்.

அருள் ஆழமாக யோசித்தான். பின்னர் அவன் குமாரின் உதவியை மறுத்து, தானாகவே பதிலை எழுத முயன்றான்.

சில இடங்களில் தவறு இருந்தாலும், அவன் முழு மனத்துடன் எழுதினான். நடந்தவை அனைத்தையும் ஆசிரியர் பொறுமையாகக் கவனித்தார்.

மாணவர்களின் மேல் தவறு இருந்தாலும், அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை ஆசிரியர் பார்த்துக்கொண்டிருந்தார். அத்தருணத்தில் அவர்களின் நேர்மையைக் கண்டு வியந்தார்.

மறுநாள், ஆசிரியர் மதிப்பெண்களை வழங்கினார். அருளுக்குச் சராசரி மதிப்பெண் வந்தது. இருப்பினும், ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.

“நேர்மையாக எழுதியது மிகவும் நல்லது,” என அருளை அவர் வாழ்த்தினார்.

பின்பு வகுப்பு முடிந்தவுடன், நண்பர்கள் மூவரையும் அழைத்து, முறையானவற்றைச் செய்திருந்தாலும் தேர்வுநேரத்தில் இப்படி நடந்துகொள்வது தவறு என்று கூறி அறிவுரை அளித்தார்.

அனைவரும் தங்கள் தவற்றை உணர்ந்தனர். அருளுக்கும் எதுவாக இருந்தாலும் எப்போதும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

நீதி: நேர்மை எப்போதும் சிறந்தது, அது நம்மை முன்னேற்றும்.

குறிப்புச் சொற்கள்
கதைதேர்வுமாணவர்