தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அரண்மனைக்கு 32 காவலர்கள்’

1 mins read
ed387084-7a72-460b-aa3e-76c37d0ef393
பெரிய வெங்காயம். - படம்: இபிஏ

1. உடல், உயிர் இல்லாத ஒருவன், பத்து சட்டை அணிந்திருப்பான். அவன் யார்?

2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?

3. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?

4. உங்களுக்குச் சொந்தமானது. ஆனால், அதை உங்களை விடவும் மற்றவர்களே அதிகம் பயன்படுத்துவார்கள். அது என்ன?

5. யாரும் செய்யாத கதவு, தானே திறந்து மூடும் கதவு. அது என்ன?

6. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள். அது என்ன?

7. உணவை எடுப்பான், ஆனால் உண்ணமாட்டான். அவன் யார்?

8. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?

தொடர்புடைய செய்திகள்

9. பரந்த தோட்டத்தில் வெள்ளிக் காசுகள் கொட்டிக் கிடக்கின்றன. அது என்ன?

10. கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?

விடைகள்:

1. பெரிய வெங்காயம்

2. தொலைபேசி, கைப்பேசி

3. முட்டை

4. பெயர்

5. கண் இமை

6. பற்கள்

7. கரண்டி

8. சூரியன்

9. நட்சத்திரம்

10. தையற்காரர்

குறிப்புச் சொற்கள்