நவீன உலகத்தின் அறிவியல் வளர்ச்சியால் நம்மைப்போன்ற மாணவர்கள் கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதை அதிகம் விரும்புகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். பள்ளி நேரம் தவிர, நாம் கைத்தொலைபேசியிலேயே மூழ்கியிருக்கிறோம் என்பதே எல்லா பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாகும்.
கைத்தொலைபேசியை அதிகம் பயன்படுத்துவதால், உடல் நலத்திற்கு கேடு, உள்ளத்திற்குச் சோர்வு என்று எவ்வளவோ அறிவுரைகளைக் கேட்டாலும் மாணவர்களின் மனம் திரும்பத் திரும்ப அதைத்தான் நாடுகிறது.
கைத்தொலைபேசியில் தேவையில்லாதவற்றைப் பார்ப்பதிலும் கைத்தொலைபேசியிலுள்ள விளையாட்டுகளிலும் நம் ஓய்வு நேரத்தை கழிக்கிறோம்.
சரி, இதிலிருந்து விடுபட நாம் என்ன செய்யலாம்?
வேறு நடவடிக்கைகளில் நம் கவனத்தைத் திருப்பலாம்!. நல்ல கருத்துள்ள புத்தகங்களை வாசித்தல், ஓவியம், நடனம், இசை போன்ற கலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல், விருப்பமான விளையாட்டைத் தேர்ந்தெடுத்தல் மூலம் நம் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம்.
நல்ல நூல்களைப் படிக்கலாம்
கைத்தொலைபேசியிலிருந்து நம் கவனத்தை நல்ல நூல்களின் பக்கம் திருப்புவோம். அறிஞர்கள், வல்லுநர்கள், அவர்களின் சாதனைகள் நமக்கு வழிகாட்டியாகட்டும். மொழியாற்றல், அறிவாற்றல், கற்பனையாற்றல் இவற்றை வளர்த்துக்கொள்வோம். உயிர் வாழ எவ்வாறு சுவாசித்தல் அவசியமோ, அதுபோல நம் அறிவு வளர்ச்சிக்கு வாசித்தல் முக்கியம் என்பதை உணர்வோம்.
விருப்பமான விளையாட்டுகள் மூலம் நாம் உறுதியான உடலைப் பெறுவோம். கலைகளில் திறமை பெற்று உள்ளத்தில் புத்துணர்ச்சி பெருவோம்! வாழ்வை வளமுள்ளதாக்குவோம்! ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்குவோம்.
தொடர்புடைய செய்திகள்
ஷ்ரத்தா சாய்ராம்
P6, நான் சியாவ் தொடக்கப்பள்ளி

