கைவினை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமன்று, அது ஒருவரின் ஆளுமையையும் திறமையையும் செதுக்கும் கலை. அதைச் செய்து முடிக்கும்போது, ஒரு படைப்பாளியாக நீங்கள் அடையும் மகிழ்ச்சி தனித்துவமானது. எனவே, அக்கலையை நாமும் கற்று, மகிழ்ச்சி அடைவோம் பிள்ளைகளே! !
தேவையான பொருள்கள்
1. காகித அட்டை
2. கத்தரிக்கோல்
3. வண்ணக் காகிதங்கள்
4. பசை
5. கம்பளி நூல்
6. பற்குச்சி
7. வண்ணம் தீட்டுவதற்கானப் பொருள்கள்
செய்முறை
- காகித அட்டையில் மரங்கொத்திப் பறவை ஒன்றை வரைந்து, வண்ணம் தீட்டுங்கள்.
- கத்தரிக்கோலைப் பயன்படுத்தி, வண்ணம் தீட்டப்பட்ட மரங்கொத்தியை அதன் வடிவத்திற்கு ஏற்ப வெட்டி எடுங்கள்.
- படத்தில் இருப்பதுபோன்று, இரு கறுப்பு நிறக் காகிதங்களை மடித்துக்கொள்ளுங்கள்.
- காகிதக் குவளையின்மீது வண்ணக் காகிதத்தை ஒட்டி, பின்னர் அதில் ஒரு துளையிடுங்கள். படி 4ல் செய்த கறுப்பு நிறக் காகித வடிவத்தின் ஒரு பகுதியைக் குவளைமீதும் மறுபகுதியைப் பறவைமீதும் ஒட்டுங்கள்.
- பற்குச்சியைப் பயன்படுத்தி அந்தப் பறவைக்கு அலகு வையுங்கள்.
- கம்பளி நூலின் ஒரு பகுதியைப் பறவைமீதும் மறுபகுதியைக் குவளையில் துளையிட்டும் கோக்கவும். குவளைப் பக்கம் இருக்கும் நூலை இழுத்தால் நெளிந்து ஆடும் மரங்கொத்தி தயார்!
நிலை 1. -
நிலை 2. -
நிலை 3. -
நிலை 4. -
நிலை 5. -
நிலை 6. -

