உன்னால் முடியும்; தலைவர்கள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறார்கள்

4 mins read
fb18626d-665e-49d8-9212-bd1c935ae209
உன்னால் முடியும் - படம்: கோப்புப் படம்

தலைமை பண்பு என்பது திறமையால் மட்டும் கிடைத்துவிடாது. தான் மட்டுமல்லாது, தன்னை சார்ந்திருப்போரைச் சாதிக்க உற்சாகப்படுத்தி வழிகாட்டுவோரிடம் தலைமை பண்பு இயல்பாக வந்துவிடும்.

தலைவர்கள் எளிமையாகவும் இயல்பாகவும் இருப்பதோடு, எப்போதும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ வேண்டும். இன்று பல நாடுகள், நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளவர்கள் செய்த முதல் வேலை என்பது மிகச் சாதாரணமான வேலையாகத்தான் இருந்துள்ளது.

நம்மாலும் தலைவனாக முடியும் என்ற தன்னம்பிக்கையை மனதில்கொண்டு, தற்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், நாளை நீங்களும் தலைவராக உயர முடியும் என்பதற்கு இவர்கள் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.

இந்திய நாட்டின் பிரதமர் மோடி:

கல்வி 1978 ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் (SOL) அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1983 இல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

1950ஆம் ஆண்டு பிறந்த இந்தியப் பிரதமர் மோடி, தனது சிறுவயதில் குஜராத் மாநிலம் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றுள்ளார். 1978ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் (SOL) அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1983ல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பில் பணியாற்றினார். 1987ல் அரசியலில் நுழைந்தார். 2001ல் குஜராத் முதல்வராக தேர்வானார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.

உக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி:

1978ஆம் ஆண்டு உக்ரேனில் யூத குடும்பத்தில் பிறந்த ஸெலன்ஸ்கி, அங்குள்ள கிவ் நேஷனல் இக்கனாமிக் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்தார். அரசியலில் நுழைந்து அதிபராகும் வரை, நடிகராகவும் நகைச்சுவைக் கலைஞராகவும் வலம் வந்தார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ:

1971ஆம் ஆண்டு பிறந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பட்டப்படிப்புக்கு பின்னர் இரவு கேளிக்கை விடுதியில் பாதுகாப்பாளராகவும், ஸ்னோபோர்டு(snowboard) பயிற்சியாளர், ஆசிரியர், குத்துச்சண்டை வீரர் என பல முகங்கள் கொண்டவர். 2007ஆம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் வார்’ என்ற படத்தில் ட்ரூடோ நடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்:

அமெரிக்காவின் 46வது அதிபரான ஜோ பைடன், 1942ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் பிறந்தவர். சட்டம் முடித்த பைடன், 29 வயதில் செனட் சபைக்கு தேர்வானார். முன்னதாக அவர், பராமரிப்பு பணியாளராக இருந்துள்ளார். தற்பொழுது அதிபராக இருக்கிறார். ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளராக அவர் தேர்வு பெறாததால் விரைவில் அதிபர் பதவியில் இருந்து விலக இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்:

ரஷ்ய அதிபர் புடின், அரசியலுக்கு வரும் முன்னர், கே.ஜி.பி. பன்னாட்டு உளவு அமைப்பின் உளவாளியாக 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1991ல் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழு நேர அரசியல் பயணத்தைத் துவங்கினார்.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்:

போரிஸ் ஜான்சன், 1987ல் தி டைம்ஸ் இதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். பின்னர் டெய்லி டெலிகிராப் இதழில் அரசியல் கட்டுரையாளராகவும், 1999 முதல் 2005ஆம் ஆண்டு வரை தி ஸ்பெக்டேட்டர் வார இதழின் ஆசிரியராக பணியாற்றி இருந்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்:

இவ்வாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டோனல்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க நாட்டு அதிபராகிறார். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் தந்தை வழியில் ரியல் எஸ்டேட், ஹோட்டல் என தொழிலதிபராக வலம் வந்தவர். தனது சுயசரிதையான ‘ஆர்ட் அப் தி டீல்’ புத்தகத்தில், தனது சகோதரருடன் இணைந்து ஆரம்பக் கட்டத்தில் சோடா பாட்டில்களைச் சேகரித்து விற்று முதல் வருமானத்தை ஈட்டியதாக குறிப்பிட்டுள்ளார். இவர் அண்மையில் அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்றதால் விரைவில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.

எலன் மஸ்க்:

உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலன் மஸ்க், வான்கூவரில் உள்ள மரம் அறுக்கும் மில்லில் பாய்லரை சுத்தம் செய்யும் பணியாளராக பணியாற்றி உள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 18 டாலர் தனது முதல் வருமானமாக பெற்றுள்ளார்.

ஜெஃப் பெஸோஸ்:

அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஜெஃப் பெஸோஸ், தனது பதின்ம வயதில் மெக்டொனால்டு உணவகத்தில் சமையல் பணியாளராகப் பணியாற்றியவர். ஒரு மணி நேரத்திற்கு 3 டாலருக்கு கீழ் வருமானமாக கிடைத்துள்ளது. பின்னர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர், அனைத்துலக வர்த்தக தொடக்க நிறுவனமான ஃபிட்டலில் சேர்ந்தார்.

வாரன் பஃபெட்:

அமெரிக்க பங்குச்சந்தையின் பிதாமகன் என்றழைக்கபடும் வாரன் பஃபெட், தனது 13 வயதில், நாளிதழ் விநியோகிப்பாளராக முதல் வேலை செய்துள்ளார். பின்னர், முதலீட்டு விற்பனையாளர், பங்குச்சந்தை நிபுணர், பெர்க்ஷையர் ஹாத்வே சி.இ.ஓ. என படிப்படியாக முன்னேறியவர். தற்போது 117 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு கொண்ட பஃபெட், உலகின் 7வது மிகப்பெரிய பணக்காரராக விளங்குகிறார்.

குறிப்புச் சொற்கள்